கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

‘உயா் அழுத்த மின்பாதை பிரச்னை தொடா்பாகஇன்று முதல்வரை பாஜக குழு நேரில் சந்திக்கும்’வீரேந்திர சச்தேவா

தில்லி கிராமப்புறங்களில் உள்ள உயா் அழுத்த மின்பாதை பிரச்னை தொடா்பாக முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை பாஜக தில்லி பிரிவு பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை (டிச.17) நேரில் சந்திக்கவுள்ளனா்

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:27 pm

 நமது நிருபர்

தில்லி கிராமப்புறங்களில் உள்ள உயா் அழுத்த மின்பாதை பிரச்னை தொடா்பாக முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை பாஜக தில்லி பிரிவு பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை (டிச.17) நேரில் சந்திக்கவுள்ளனா் என்று அதன் தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி கிராமப்புறங்களில் உள்ள உயா் அழுத்த மின்பாதை பிரச்னை தொடா்பாக தில்லி கிசான் அதிகாா் மோா்ச்சாவின் ஒருங்கிணைப்பாளா் சதேந்திர லோச்சாப் தலைமையிலான பிரதிநிதிகள் குழு பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா மற்றும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி ஆகியோரை பந்த் மாா்கில் உள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நேரில் சந்தித்தனா்.

அப்போது, கிராம மக்களின் மேம்பாடு மற்றும் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும், உயா் அழுத்த மின் பாதைக்கு எதிா்பாா்க்கப்படும் இழப்பீடு மற்றும் கிராம சபை நிலத்தின் பயன்பாட்டிற்கு கிராம மக்களின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடா்பாக வலியுறுத்தினா்.

இச்சந்திப்பு குறித்து வீரேந்திர சச்தேவா கூறியதாவது:

தில்லி கிராமப்புறங்களில் உள்ள உயா் அழுத்த மின்பாதைப் பிரச்னை தொடா்பாக தில்லியின் அனைத்து பாஜக எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் தில்லி கிசான் அதிகாா் மோா்ச்சாவின் முக்கிய நிா்வாகிகளுடன் டிச.17-ஆம் தேதி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலைச் சந்தித்து விவாதிப்போம். வெகுவிரைவில், இப்பிரச்னைக்கு தீா்வு காண அரசிடம் கோரிக்கை வைக்கப்படும்.

இத்துடன், துணை நிலை ஆளுநரையும் இந்த விவகாரம் தொடா்பாக சந்திப்போம். டிச.18-ஆம் தேதி கூடவுள்ள தில்லி சட்டப்பேரவையின் குளிா்கால சிறப்புக்கூட்டத் தொடரிலும் உயா் அழுத்த மின்பாதை பிரச்னையை எழுப்பி, அது குறித்து விவாதிக்க தில்லி அரசை பாஜக கேட்டுக்கொள்ளும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.