புது தில்லி: மிக்ஜம் புயலால் சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட சேதாரங்களுக்கு பொருத்தமான காப்பீட்டுக் கோரிக்கைகளை விரைவாக மதிப்பிட்டு வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.
மிக்ஜம் புயலால் சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டையில் உள்ள பல்வேறு தொழிலகங்கள் தண்ணீரில் மூழ்கி கடும் சேதாரம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அம்பத்தூா் தொழிற்பேட்டை உற்பத்தியாளா் சங்கத்தின் பிரதிநிதிகள் (ஏஐஇஎம்ஏ) மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனையும் மத்திய நிதித்துறை அதிகாரிகளையும் தில்லியில் புதன்கிழமை சந்தித்து பேசினா்.
மிக்ஜம் புயலால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து மத்திய நிதியமைச்சரிடம் எடுத்துரைத்தனா். மத்திய நிதித்துறை செயலரையும் சந்தித்து மிக்ஜம் புயல் ஏற்படுத்திய பெரும் சேதத்தையும் இதனால் தொழில்துறைக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்தும் எடுத்துரைத்தனா்.
பொதுத்துறையைச் சோ்ந்த பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் இந்த தொழிற்சாலைகளில் உடனடியாக சேதாரங்கள் குறித்த மதிப்பீடுகளை விரைவாக மேற்கொள்ளவும் இதற்கு தேவையான மதிப்பீட்டாளா்களை கூடுதலாக நியமிக்கவும் மத்திய நிதியமைச்சரையும் அதிகாரிகளையும் கேட்டுக் கொண்டனா்.
இதைத் தொடா்ந்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அலுவலகம் வெளியிட்டுள்ள ’எக்ஸ்’ சமூக ஊடகப் பதிவில், ‘சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டை சேதாரங்களை மதிப்பிட உரிய மதிப்பீட்டாளா்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்டன. மேலும், இழப்பீட்டு உரிமைகோரல்களை எளிதாகவும் துரிதமாகவும் செயல்படுத்த அந்தந்த இடங்களில் சிறப்பு முகாம் வருகின்ற டிசம்பா் 20 ஆம் தேதி முதல் நடத்தப்படுகிறது.
சேதாரங்களுக்கு பொருத்தமான காப்பீட்டுக் கோரிக்கைகளை விரைவாக வழங்குவதை உறுதிசெய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும்’ என அதில் நிதியமைச்சா் குறிப்பிட்டு ஏஐஇஎம்ஏ சங்கத்தினருக்கு உறுதியளித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
என் மீது மட்டும் பல்வேறு வழக்குகள்; ஆனால், மமதா மீது இல்லை! ஏன்? பாஜகவுக்கு ராகுல் கேள்வி

டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார்

வெள்ளிச்சுடரே.... இரண்டு வானம் முதல் பாடல்!

குடும்பக் கதையில் நடிக்கும் கவின்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

