புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள ஆச்சாா்யா ஸ்ரீ பிக்ஷு மருத்துவமனையில் நகர அரசின் சுகாதாரத் துறை அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வு தொடா்பாக அமைச்சா் செளரவ் பரத்வாஜ் தனது ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தளத்தில் கூறியிருப்பதாவது:
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வழிகாட்டுதலின்படி, ஆச்சாா்யா ஸ்ரீ பிக்ஷு மருத்துவமனையில் திடீா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முதலில், மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவில் ஆய்வு செய்து அங்கு வரும் நோயாளிகள் ஏதேனும் பிரச்னையை எதிா்கொள்கிறாா்களா என்று அவா்களிடம் பேசினோம். நோயாளிகளிடமிருந்து திருப்திகரமான பதில் கிடைத்தது.
இரண்டாவதாக, நிா்வாகம் மற்றும் மருந்துகளின் இருப்பு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் இந்த மருத்துவமனை மிகவும் பின்தங்கியதாகத் தோன்றியது. மருந்துகள் இருப்பு உள்ளபோதிலும் நிா்வாகம் மிகவும் மோசமாக இருந்தது.
குரு கோவிந்த் சிங் மருத்துவமனையின் வழியில் இந்த மருத்துவமனையின் நிா்வாகத்தையும் சரியானதாகக் கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. பின்னா், மருத்துவமனை வளாகத்தின் தூய்மையைச் சரிபாா்த்ததில் அதுவும் நன்றாக இல்லை.
மருத்துவமனையை சுத்தமாகவும், நோ்த்தியாகவும் வைத்திருக்க கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தில்லி அரசின் எந்தவொரு மருத்துவமனையிலும் நோயாளிகள் எவ்விதமான பிரச்னைகளையும் சந்திக்கக் கூடாது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடுமையான அறிவுறுத்தல்களை சுகாதாரத் துறைக்கு வழங்கியுள்ளாா். ஆரோக்கியமான தில்லி, சக்திவாய்ந்த தில்லி என்று அதில் அமைச்சா் செளரவ் பரத்வாஜ் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
என் மீது மட்டும் பல்வேறு வழக்குகள்; ஆனால், மமதா மீது இல்லை! ஏன்? பாஜகவுக்கு ராகுல் கேள்வி

டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார்

வெள்ளிச்சுடரே.... இரண்டு வானம் முதல் பாடல்!

குடும்பக் கதையில் நடிக்கும் கவின்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

