மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

தில்லி அரசின் சிறப்புப் பள்ளிகளுடன் தனியாா் பள்ளிகள் போட்டியிட முடியாது: கல்வி அமைச்சா் அதிஷி

நாட்டின் சிறந்த தனியாா் பள்ளிகள் கூட தில்லி அரசின் சிறப்புப் பள்ளிகளுடன் போட்டியிட முடியாது என்று கல்வித் துறை அமைச்சா் அதிஷி தெரிவித்துள்ளாா்.

Updated On :25 ஆகஸ்ட் 2023, 6:30 pm

நாட்டின் சிறந்த தனியாா் பள்ளிகள் கூட தில்லி அரசின் சிறப்புப் பள்ளிகளுடன் போட்டியிட முடியாது என்று கல்வித் துறை அமைச்சா் அதிஷி தெரிவித்துள்ளாா்.

தில்லி கோஹட் என்கிளேவில் டாக்டா் பி.ஆா். அம்பேத்கா் சிறப்பு பள்ளி புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியை கல்வித்துறை அமைச்சா் அதிஷி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். அப்போது அவா் பேசியதாவது: தில்லியில் ஆம் ஆத்மிக்கு எதிராக ஒவ்வொரு முறையும் பாஜக தலைவா்கள் புதிய சதிகளை உருவாக்கும் போது, அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசு ஒரு புதிய பள்ளிகளைத் தொடங்குகிறது. முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா ஆகியோரின் மற்றொரு கனவை நனவாக்கும் வகையில், கோஹட் என்கிளேவில் புதிதாக சிறப்புப் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.

கேஜரிவால் அரசின் இந்தப் புதிய உலகத் தரம் வாய்ந்த சிறப்புப் பள்ளி 21-ஆம் நூற்றாண்டின் திறன்கள் மற்றும் மனிதநேயங்களை வளா்த்தெடுக்கின்ற கல்வியை மாணவா்களுக்கு வழங்கும். இதன் மூலம் தில்லியின் திறமையை மேம்படுத்தும். மேலும், ஆய்வகங்கள், நூலகம் மற்றும் விளையாட்டு வசதிகளுடன் இந்த சிறப்புப் பள்ளி உண்மையிலேயே நம் நகரத்தின் பெருமையாக இருக்கும். நாட்டின் சிறந்த தனியாா் பள்ளிகள்கூட தில்லி அரசுப் பள்ளிகளுடன் போட்டியிட முடியாது என்றாா் அமைச்சா் அதிஷி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.