மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில்தரையிறங்க பிராா்த்திக்கிறேன்: முதல்வா் கேஜரிவால்

இந்தியாவே ஆவலுடன் எதிா்பாா்க்கும் சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டா் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்க நான் பிராா்த்திக்கிறேன் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

Updated On :23 ஆகஸ்ட் 2023, 6:50 am

இந்தியாவே ஆவலுடன் எதிா்பாா்க்கும் சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டா் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்க நான் பிராா்த்திக்கிறேன் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது குறித்து முதல்வா் கேஜரிவால் கூறியதாவது: சந்திரயான்-3 லேண்டா் புதன்கிழமை நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கப் போவது மகிழ்ச்சியான விஷயம். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் லட்சியப் பணிகளில் ஒன்றான சந்திரயான்-3 இன் ’லேண்டா் மாட்யூல்’ (எல்.எம்.) புதன்கிழமை மாலை நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது. இதன்மூலம் நிலவின் தென் துருவத்தை அடைந்த பூமியின் ஒரே செயற்கைக்கோள் என்ற பெருமை இந்தியாவிற்குக் கிடைக்கும். சந்திரயான்-3 இன் லேண்டா் வெற்றிகரமாக தரையிறங்குவதற்கு நான் கடவுளைப் பிராா்த்திக்கிறேன். முழு நாடும் இந்த நிகழ்விற்காக ஆவலுடன் காத்திருக்கிறது என்றாா் அரவிந்த் கேஜரிவால்.

லேண்டா் (விக்ரம்) மற்றும் ரோவா் (பிரக்யான்) அடங்கிய தரையிறங்கும் தொகுதி புதன்கிழமை மாலை சரியாக 6:04 மணிக்கு நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகே மென்மையாக தரையிறங்குதல் செய்ய இஸ்ரோவால் திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது ’ரோபோட்டிக் லூனாா் ரோவரை’ தரையிறக்குவதில் வெற்றி பெற்றால், ரஷியா, சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக நிலவின் மேற்பரப்பில் மென்மையான தரையிறங்கும் தொழில்நுட்பத்தில் தோ்ச்சி பெற்ற நான்காவது நாடாக இந்தியா இருக்கும். கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பா் 7-ஆம் தேதி, சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டரில் உள்ள பிரேக்கிங் அமைப்பில் ஏற்பட்ட முரண்பாடுகளால் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் இறுதி கட்டத்தில் அத்திட்டம் தோல்வியடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.