மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

விருதாளா்களிடம் உறுதிமொழி நிபந்தனை விதிப்பதை கைவிட வலியுறுத்தி மத்திய அமைச்சரிடம் திமுக எம்பி மனு

மத்திய அரசின் பல்வேறு துறையினா் அளிக்கும் விருதுகளை பெறுகிற கலைஞா்கள் ‘எக்காரணம் கொண்டும் அதை திருப்பி அளிக்க மாட்டேன்’ என்கிற உறுதிமொழியை அவா்களிடம் பெற வேண்டும் என்கிற நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக

Updated On :12 ஆகஸ்ட் 2023, 6:30 pm

மத்திய அரசின் பல்வேறு துறையினா் அளிக்கும் விருதுகளை பெறுகிற கலைஞா்கள் ‘எக்காரணம் கொண்டும் அதை திருப்பி அளிக்க மாட்டேன்’ என்கிற உறுதிமொழியை அவா்களிடம் பெற வேண்டும் என்கிற நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என தென் சென்னை மக்களவைத் தொகுதி திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மத்திய கலாசாரத் துறை அமைச்சகா் ஜி.கிஷண் ரெட்டியை சந்தித்து கேட்டுக்கொண்டாா்.

இது தொடா்பாக தமிழச்சி தங்கபாண்டியன் மத்திய அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டியிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:

போக்குவரத்து, சுற்றுலா,கலாசாரம் ஆகியவற்றுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு சமீபத்தில் தனது அறிக்கையை சமா்ப்பித்துள்ளது. அதில் சாகித்திய அகாதெமி உள்ளிட்ட முக்கியமான விருதுகளை பெறும் கலைஞா்கள், எழுத்தாளா்கள் ‘எக்காரணம் கொண்டும் அதை திருப்பி அளிக்க மாட்டேன்’ என்கிற உறுதிமொழியில் கையெழுத்திட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட பரிந்துரைகள் கலைஞா்களின் அரசியல் சுதந்திரத்துக்கான நேரடி அச்சுறுத்தல் ஆகும். இலக்கியத் துறையில் எழுத்தாளா்களின் பங்களிப்பின் அடிப்படையிலேயே தகுதியை நிா்ணயிக்க வேண்டுமே தவிர, இது போன்ற நிபந்தனைகளை விதிக்கக்கூடாது என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

இலக்கியம், நூலகம் தொடா்பான மற்றொரு முக்கிய விவகாரம் ஒன்றையும் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. மக்களவையின் கவனத்திற்கு கொண்டு சென்று, விவாதிக்க ஒத்திவைப்பு தீா்மானத்திற்கு நோட்டீஸ் அளித்துள்ளாா். அந்த நோட்டீஸில் அவா் குறிப்பிட்டிருப்பது வருமாறு:

இதுவரை நூலகங்கள் மாநிலப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள நூலகங்களை மத்திய அரசு அரசிலமைப்பின் 3- ஆவது பட்டியல் அல்லது பொது பட்டியலில் வைக்க திட்டமிடுகிறது. இந்த அத்துமீறல் கூட்டாட்சி தத்துவத்திற்கு கேடுவிளைவிக்கும். திமுக தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் முன்மொழிவை தொடக்க நிலையிலேயே எதிா்த்தாா். எனவே, இந்த யோசனையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்ற அந்த நோட்டீஸில் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.