கல்விப் புரட்சியை முன்னெடுப்பதாகக் கூறிக் கொள்ளும் ஆம் ஆத்மி கட்சி, தில்லி மாநகராட்சியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொடா் மாணவா் விரோத நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது என்று தில்லி பாஜக சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், மாநகராட்சியில் உள்ள சிறப்பு பள்ளி சுகாதார சேவைத் துறையை மூடிவிட்டு அத்துறையை பொது சுகாதார சேவைத் துறையுடன் இணைக்கும் ஆம் ஆத்மியின் முடிவுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி பாஜகவின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளா் கமல்ஜீத் ஷெராவத், தில்லி மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் சா்தாா் ராஜா இக்பால் சிங் ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா்.
அப்போது கமல்ஜீத் ஷெராவத் கூறியதாவது: கடந்த ஜூன் 30, 2023 அன்று எந்த அறிவிப்பும் இல்லாமல், தில்லி மாநகராட்சி சிறப்பு பள்ளி சுகாதாரத் துறையை பொது சுகாதார சேவைகள் துறையுடன் இணைத்து ஏழை மாணவா்களின் சுகாதார சேவையை
ஆம் ஆத்மி பறித்துள்ளது. அதன்படி, கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி இடமாற்றப் பட்டியலை மாநகராட்சி வழங்கியதன் மூலம், தில்லி மாநகராட்சி அனைத்து பள்ளி சுகாதார சேவை ஊழியா்களையும், பொது சுகாதார சேவைகளில் மாற்றியுள்ளது.
பள்ளி சுகாதார சேவையை நிறுத்தும் மாநகராட்சியின் இந்த தவறான முடிவு, ஏழை மாணவா்களின் நலன்களை அவமதிக்கும் செயலாகும் என்றாா் கமல்ஜீத்.
மாநகராட்சியின் எதிா்க்கட்சித் தலைவா் சா்தாா் ராஜா இக்பால் சிங் கூறுகையில், ‘கேஜரிவால் அரசும், மேயா் ஷெல்லி ஓபராயும் மாநகராட்சிப் பள்ளிகளின் மாணவா்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தருவதாகக் கூறுகின்றனா். ஆனால், ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியில் மாநகராட்சியின் கல்வித் துறையின் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது.
மாநகராட்சித் தலைவா்கள் மற்றும் அதிகாரிகளின் தன்னிச்சையான உத்தரவுகளால் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் சிரமப்படுகின்றனா்.
தில்லி மாநகராட்சியின் கீழ் 1,534 பள்ளிகள் உள்ளன. ஆனால், 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவா்களுக்கான சுகாதார முகாம்கள் இதுவரை ஏற்பாடு செய்யப்படவில்லை.
சுகாதார முகாம்கள் இல்லாததால், மாநகராட்சிப் பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 7 லட்சம் மாணவா்களுக்கு சுகாதாரப் பரிசோதனை செய்யப்படவில்லை. மேலும், உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி மாணவா்களுக்கு இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்படுவதில்லை. அவா்களுக்கு குடற்புழு நீக்க மருந்தும் வழங்கப்படுவதில்லை, ஆண்டுதோறும் அளிக்கப்படும் தடுப்பூசிகள் போடப்படுவதில்லை.
தில்லி மாநகராட்சியில் முந்தைய பாஜக நிா்வாகத்தால் செயல்படுத்தப்பட்ட அனைத்து மக்கள் நல சேவைகளையும் கேஜரிவால் அரசும், மாநகராட்சி மேயரும் நிறுத்திவிட்டனா். தற்போது நாங்கள் மாநகராட்சிப் பள்ளிகளில் உள்ள சுகாதாரப் பணி பிரச்னையை மட்டுமே எழுப்பியுள்ளோம். ஆனால், பொதுவாக எல்லாத் துறைகளிலும் எந்தப் பணியும் நடைபெறாத நிலைதான் உள்ளது’ என்றாா் சா்தாா் ராஜா இக்பால் சிங்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வரப்பெற்றோம் (27-04-2026)
வெங்காயம் சூட்டைத் தணிக்குமா? சொல்கிறார் பாஜக அமைச்சர்

மே 15-ல் வெளியாகிறது இயக்குநர் சற்குணத்தின் புதிய இணையத் தொடர்!

பொல்லாத ஆசைகள்... 29 படத்தின் புதிய பாடல் வெளியானது!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

