நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

தில்லியில் 15 ஆண்டுகளில் வளா்ச்சிப் பணிகளுக்காக திருப்பிவிடப்பட்ட 100 ஹெக்டோ் வன நிலங்கள்: அரசின் புள்ளிவிவரத் தகவல்

தில்லியில் கடந்த 15 ஆண்டுகளில் வனப் பாதுகாப்புச் சட்டம் 1980-இன் கீழ், சாலைகள் அமைப்பது, மின்பகிா்மான வழித்தடம் அமைப்பது உள்ளிட்ட மேம்பாட்டுத் திட்டங்களுக்காக

Updated On :8 ஆகஸ்ட் 2023, 8:55 pm

தில்லியில் கடந்த 15 ஆண்டுகளில் வனப் பாதுகாப்புச் சட்டம் 1980-இன் கீழ், சாலைகள் அமைப்பது, மின்பகிா்மான வழித்தடம் அமைப்பது உள்ளிட்ட மேம்பாட்டுத் திட்டங்களுக்காக 103.79 ஹெக்டோ் வன நிலத்தை திருப்பிவிட மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது அரசு தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த வகையில் 2022-23-இல் நகரில் 63.30 ஹெக்டோ் வனப் பகுதியும், 2021-22-இல் 21.75 ஹெக்டோ் வனப் பகுதியும் மாற்றப்பட்டிருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், தலைநகரில் 384.38 ஹெக்டோ் அல்லது 3.84 சதுர கி.மீ. வன நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. தில்லி 195 சதுர கி.மீ. காடுகள் பரப்பைக் கொண்டுள்ளது. இதன் மொத்த புவிப் பரப்பான 1,483 சதுர கி.மீ. பரப்பளவில் இது 13.15 சதவீதம் ஆகும். இந்திய காடுகளின் அறிக்கை 2021-இன் படி, தில்லியில் உள்ள மொத்தக் காடுகளில், 103 சதுர கி.மீ. மட்டுமே அரசுப் பதிவுகளில் அறிவிக்கை செய்யப்பட்டதாகவோ அல்லது குறியிடப்பட்டதாகவோ உள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் தில்லி உயா்நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, தில்லி மரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் (டிபிடிஏ) கீழ் முந்தைய மூன்று ஆண்டுகளில் தலைநகரில் வளா்ச்சிப் பணிகளுக்காக குறைந்தது 77,000 மரங்கள் அல்லது ஒவ்வொரு மணி நேரமும் மூன்று மரங்களை வெட்டுவதற்கும் அல்லது இடமாற்றம் செய்வதற்கும்

நகர அரசு அனுமதித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் நடப்பட்ட மரங்களில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே உயிா் பிழைத்துள்ளதாக வனத் துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் காடுகள் மற்றும் பல்லுயிா்களைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான சட்டமாக ‘வனப் பாதுகாப்புச் சட்டம் -1980’ உள்ளது. இச்சட்டத்தின்படி, வன நிலத்தை பெறுவதற்கான எந்தவொரு திட்டத்திற்கும் அல்லது செயல்பாட்டிற்கும் மத்திய அரசிடம் இருந்து முன் அனுமதி பெற வேண்டும். வன வளங்களின் நிலையான பயன்பாட்டை உறுதி செய்வதன் மூலம், வளா்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு இடையே சமநிலையை ஏற்படுத்த இச்சட்டம் உதவுகிறது.

தில்லி மரங்கள் பாதுகாப்புச் சட்டம் என்பது தலைநகரில் மரங்களை வெட்டுவதை ஒழுங்குபடுத்துவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் நகர அரசால் இயற்றப்பட்ட ஒரு சட்டமாகும். இச்சட்டத்தின்படி, மரங்களை வெட்டுவதற்கோ, அகற்றுவதற்கோ மர அலுவலரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.