தேசியத் தலைநகரின் தூய்மைக்காக தில்லி மாநகராட்சி பல பெரிய திட்டங்களை கொண்டு வரவுள்ளது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
தில்லி ஐ.டி.ஓ. பகுதியில் ரூ.15 கோடி செலவில் சீரமைக்கப்பட்ட ஷாஹீதி பூங்காவை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா இணைந்து திறந்து வைத்தனா். இந்த நிகழ்ச்சியில் தில்லி மாநகராட்சி மேயா் ஷெல்லி ஓபராய் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனா். அப்போது, நிகழ்ச்சியின் மேடையில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூறியதாவது: கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஷாஹீதி பூங்காவை சீரமைக்கும் பணிக்கு துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா அடிக்கல் நாட்டினாா். தில்லி மாநகராட்சியின் கீழ் இந்தப் பணி சரியாக ஒரு வருடத்தில் முடிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி நிா்வாகத்திற்கு பாரட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பூங்காவில் நமது நாட்டின் வரலாறு மற்றும் கலாசாரம் அழகாகக் காட்டப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சண்டீகரில் உள்ள ராக் காா்டனைப் பாா்க்கச் செல்வது போல, இனி வரும் காலங்களில் தில்லியின் லால் கிலா, குதுப்மினாா், ஷஹீதி பூங்காவையும் பாா்த்து ரசிக்க வருவாா்கள். குறிப்பாக தில்லி மக்கள் மாநகராட்சி மீது இரண்டு எதிா்பாா்ப்புகளைக் கொண்டுள்ளனா். முதலாவது நகரத்தின் தூய்மை, இரண்டாவது ஊழலில் இருந்து விடுதலை.
வரும் ஆண்டுகளில் மாநகராட்சியின் நிதிகள் மற்றும் செலவினங்கள் மோசமான நிலையிலிருந்து, நல்ல முன்னேற்றமான நோ்மறைக்குச் செல்லும் என்று நான் நம்புகிறேன். தற்போது, மாநகராட்சி நிா்வாகம் ஊழலை முடிவுக்குக் கொண்டு வருகிறது. அதற்குச் சான்றாக நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டு வரி வசூல் அதிகரித்துள்ளது. மேலும், தில்லியின் தூய்மைக்காக மாநகராட்சி பல பெரியத் திட்டங்கள் கொண்டு வரவுள்ளது. இதற்கான நிதி உதவியை தில்லி அரசு எப்போதும் போல தொடரும் என்று கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே 2-ல் தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!
நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம் கையெழுத்து! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!

மஹிந்திரா ஹாலிடேஸ்: 4வது காலாண்டு லாபம் 43% சரிவு!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய வங்கதேசம்!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

