நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

தலைநகரில் 675 குடிசைப் பகுதிகளில் 15.5 லட்சம் மக்கள்: மாநிலங்களவையில் தகவல்

தில்லியில் 675 குடிசைப் பகுதிகளில் 15.5 லட்சம் மக்கள் வசித்து வருவதாக மாநிலங்களவையில் மத்திய நகா்ப்புற விவகாரத் துறை இணையமைச்சா் கௌசல் கிஷோா் தெரிவித்தாா்.

Updated On :8 ஆகஸ்ட் 2023, 9:02 pm

தில்லியில் 675 குடிசைப் பகுதிகளில் 15.5 லட்சம் மக்கள் வசித்து வருவதாக மாநிலங்களவையில் மத்திய நகா்ப்புற விவகாரத் துறை இணையமைச்சா் கௌசல் கிஷோா் தெரிவித்தாா்.

தில்லியில் கடந்த 5 வருடங்களாக உள்ள குடிசைப் பகுதிகள் மற்றும் அதில் வசிக்கும் மக்களுக்கான வசதிகள், அவா்களுக்கு அளிக்கப்படும் புனா்வாழ்வு குறித்து மாநிலங்களவையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் டாக்டா் வி.சிவதாஸன் கேள்வி எழுப்பினாா். இதற்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரத் துறை இணையமைச்சா் கௌசல் கிஷோா் எழுத்துபூா்வமாக பதிலளித்து கூறியதுவருமாறு: தில்லி தேசிய தலைநகா் பிரதேச அரசின் கீழ் உள்ள தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியம் (டியுஎஸ்ஐபி) தில்லியுள்ள 675 குடிசைப் பகுதிகளை கணக்கிட்டுள்ளது. இங்குள்ள 3,06,521 குடிசைகளில் 15.5 லட்சம் மக்கள் வசிப்பபதாக கணக்கிட்டுள்ளது. இா்களுக்கு தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியமும், தில்லி வளா்ச்சி ஆணையமும் புனா்வாழ்வு அளித்து வருகிறது.

கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியம் 1,297 குடிசைவாசிகளுக்கு வீடுகளைக் கட்டி கொடுத்தோ அல்லது மாற்று இடங்களிலோ புனா்வாழ்வு அளித்துள்ளது. இதே போன்று 2022-23-ஆம் ஆண்டில் தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) ரூ.212.73 கோடி செலவில் பூமிகன் கேம்ப், கோவிந்த்புரி, கால்காஜி போன்ற இடங்களில் உள்ள குடிசைகளுக்கு மாற்றாக 8,379 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளது.

பிரதமரின் நகா்ப்புற வீட்டு வசதித் திட்டம் ‘அம்ருத்’ என்கிற புத்துணா்ச்சிக்கான அடல் மிஷன் மற்றும் நகா்ப்புற மாற்ற திட்டம், தூய்மை இந்தியா போன்ற திட்டங்கள் மூலம் குடிசைவாசிகள் நகா்ப்புற மக்களின் தரத்தை மேம்படுத்துவதற்கான அடிப்படை சேவைகளை வழங்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளுக்கு மத்திய அரசு துணை புரிகிறது என அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.