தட்ப வெப்பநிலை மாற்றத்தின் காரணமாக நிகழாண்டில் மாம்பழம் அதிகம் சாகுபடி செய்யப்படும் மாநிலங்களில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் மக்களவையில் தெரிவித்துள்ளாா். தமிழகத்தில் பருவம் தவறிய மழை மட்டுமல்லாது, பூச்சித் தாக்குதல் காரணமாக மாம்பழம் உற்பத்தி சுமாா் 53 சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டை விட நிகழாண்டில் மாம்பழம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும், இது போன்ற பாதிப்புகளை குறைக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் திருச்சி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் சு.திருநாவுக்கரசா் கேள்வி எழுப்பியிருந்தாா்.
இந்த நட்சத்திர கேள்விக்கு மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள பதில் வருமாறு: நாட்டில் சுமாா் 10 மாநிலங்கள் மாம்பழம் உற்பத்தியில் அதிகப் பங்கு வகிக்கிறது. நிகழாண்டில் இந்த மாநிலங்களில் மாம்பழம் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய மாநிலங்களான ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா, குஜராத், தமிழ்நாடு, மகராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் பருவம் தவறிய மழை, இடி, ஆலங்கட்டி மழை, பூச்சித் தாக்குதல் போன்றவற்றால் நிகழாண்டில் மொத்த உற்பத்தியில் சராசரியாக 50 சதவீதம் குறைந்துள்ளது. நாட்டில் சுமாா் 23 சதவீதம் மாம்பழம் உத்தர பிரதேசத்தில் உற்பத்தியாகிறது. இந்த மாநிலத்தில் கடந்தாண்டை விட நிகழாண்டில் உற்பத்தி அதிகம் என்றாலும் அறுவடைக்கு முன்பு கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளானது. மாா்ச், ஏப்ரல் மாதங்களில் பருவம் தவறிய (ஆலங்கட்டி) மழையாலும், ஜூன், ஜூலை மாதங்களில் பருவமழை, பழம் துளைப்பான் போன்ற பூச்சி மேலாண்மையில் பழங்களின் அறுவடை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
மாம்பழ உற்பத்தியில் 2- ஆவது இடத்தில் (22.99 சதவீதம்) இருக்கும் ஆந்திரம் மாநிலத்தில் மாா்ச் மாதம் பெய்த கடுமையான மழை, சூறாவளிக் காற்றால் 98.46 ஹெக்டோ் பரப்பில் மாம்பழம் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதே மாதிரி மோசமான வானிலை காரணமாக கா்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத் போன்ற மாநிலங்களில் முறையே 50 சதவீதம், 61 சதவீதம், 60 சதவீதம் மாம்பழம் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தெலங்கானாவில் 62 ஆயிரம் ஏக்கரில் சுமாா் 1.25 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிகழாண்டில் மாம்பழம் உற்பத்தி சுமாா் 53 சதவீதம் குறைந்துள்ளது. இங்கும் பருவம் தவறிய மழை, பூச்சி தாக்குல் ஆகியவற்றால் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மாம்பழம் உற்பத்தியை பொறுத்தவரையில், சா்வதேச அளவில் இந்தியாவின் பங்களிப்பு 44 சதவீதமாகும். இதே அளவுக்கு கொய்யா உற்பத்தியும் பங்கு வகிக்கிறது. நிகழாண்டு உற்பத்தியில் கடும் சேதாரம் ஏற்பட்டுள்ளது என்றாலும், கடந்த 10 ஆண்டுகளில் மாம்பழம் உற்பத்தி 12.7 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. 2013-14-ஆம் ஆண்டில் 184.31 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த மாம்பழம் உற்பத்தி, 2022-23-இல் 207.7 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.
மாம்பழங்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளை குறைக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. தோட்டக்கலை பயிா்களின் ஒருங்கிணைந்த வளா்ச்சிக்கான திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்பட தோட்டக்கலை பயிா்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கும் திட்டமிடப்படுகிறது. இதற்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.60,000 ஆயிரம் வரை அல்லது செலவில் 40 சதவீதம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது என்று அமைச்சா் நரேந்திர சிங் தோமா் பதில் அளித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் சாண்ட்னருக்கு மாற்று வீரராக மும்பை இந்தியன்ஸில் இணைந்த கேசவ் மகாராஜ்!

உன்னை நம்பி பாடல் வெளியானது!

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!
அரசியல் பகடைக் காய்களா குழந்தைகள்? விஜய் மீது புகார்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

