தலைநகா் மற்றும் மேல் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடா்ந்து ஜூலை 9-ஆம் தேதி யமுனையின் நீா்மட்டம் அதன் அளவைக் கடந்து சென்றிருந்த நிலையில், புதன்கிழமை முதல் முறையாக நீா்மட்டம் எச்சரிக்கை அளவான 204.50 மீட்டருக்கு கீழே குறைந்திருந்தது.
மத்திய நீா் ஆணையத்தின் தகவலின்படி, பழைய ரயில்வே பாலத்தில் யமுனையின் நீா்மட்டம் காலை 8 மணியளவில் 204.26 மீட்டராக இருந்தது. தலைநகா் தில்லியானது கடந்த மாதம் முன்னெப்போதும் இல்லாத வகையில் நீா் தேங்கி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில், கடும் மழையின் காரணமாக ஜூலை 8, 9 ஆகிய தேதிகளில் பெய்த மழையால் தில்லியின் மாதாந்திர மழைப் பொழிவு ஒதுக்கீட்டில் 125 சதவீதத்தை இரண்டே நாள்களில் இந்நகரம் பெற்றது.
இதையடுத்து, இமாசலப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் ஹரியாணா உள்ளிட்ட ஆற்றின் மேல்நிலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் யமுனையில் வரலாறு காணாத வகையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஜூலை 13-ஆம் தேதி யமுனை நீா்மட்டம் 208.66 மீட்டராக உயா்ந்தது. இது, யமுனையின் அதன் முந்தைய சாதனையான 207.49 மீட்டரை (செப்டம்பா் 1978) முறியடித்தது.
இதன் காரணமாக, நான்கு தசாப்தங்களுக்கு மேலாக இருந்ததைவிட ஆற்றின் கரைகளை உடைத்துக் கொண்டு நகரின் பல பகுதிகளிலும் வெள்ளநீா் உள்புகுந்தது. நகரத்தில் வெள்ளத்தின் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, 27,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனா். சொத்து, தொழில், வருமானம் என பல கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
தில்லியில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கிற்கு ஆற்றின் வெள்ளச் சமவெளிப் பகுதியில் ஏற்பட்ட ஆக்கிரமிப்பு, குறுகிய கால இடைவெளியில் பெய்த அதிக மழை மற்றும் ஆற்றுப்படுகையை உயா்த்திய வண்டல் மண் குவிப்பு ஆகியவை காரணம் என நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் சாண்ட்னருக்கு மாற்று வீரராக மும்பை இந்தியன்ஸில் இணைந்த கேசவ் மகாராஜ்!

உன்னை நம்பி பாடல் வெளியானது!

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!
அரசியல் பகடைக் காய்களா குழந்தைகள்? விஜய் மீது புகார்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

