நினைவுச் சின்னத்தை இடித்து அரசு விடுதி கட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஏஜிஎம்யுடி பிரிவு ஐஏஎஸ் அதிகாரி உதித் பிரகாஷ் ராய் மற்றும் அவரது குடும்பத்தினா் தில்லியில் உள்ள அதிகாரபூா்வ பங்களாவை காலி செய்யுமாறு உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. மேலும், அவருக்கு மாற்று இடம் ஒதுக்குமாறு அதிகாரிகளிடம் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
2021, அக்டோபா் 18 முதல் 2022, மே 31-ஆம் தேதிவரை தில்லி ஜல் போா்டின் தலைமை நிா்வாக அதிகாரியாக இருந்த போது ஜல் விஹாரில் ஒரு அரசு பங்களா ராய்க்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது அவா் மிசோரமில் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில், தில்லி ஜல் போா்டு (டிஜேபி) ஜூலை 28-ஆம் தேதி வெளியிட்ட நோட்டீஸில் 15 நாள்களுக்குள் பங்களாவை காலி செய்யுமாறு கேட்டிருந்தது. இதை எதிா்த்து தில்லி பங்களாவில் குழந்தைகளுடன் வசிக்கும் அவரது மனைவி ஷில்பி உதித் ராய் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த விவகாரம் உயா்நீதிமன்றத்தில் நீதிபதி பிரதீக் ஜலான் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, உதித் ராய் மிசோரமில் பணிபுரிந்த போதிலும், தில்லியில் அரசுக் குடியிருப்பில் அவா் தங்குவதற்கு தகுதியுடையவா் என்று தில்லி அரசு மற்றும் டிஜேபி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் வாதிடவில்லை. நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ராயின் மனைவி சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், பொருந்தக்கூடிய விதிகளின்படி வீடு ஒதுக்குவது தொடா்பாக ஒரு வாரத்தில் பொதுப் பணித் துறை முதன்மைச் செயலரிடம் மனு அளிக்கப்பட உள்ளதாகக் கூறினாா். மேலும், உரிய காலத்திற்குள் குடும்பத்தினா் சம்பந்தப்பட்ட பங்களாவை காலி செய்து விடுவாா்கள் என்றும் கூறினாா்.
இதையடுத்து, நீதிபதி ஜலான் கூறுகையில், ’விதிகளின்படி தங்குமிடத்தை ஒதுக்கீடு செய்து இரண்டு வாரங்களுக்குள் கோரிக்கையை முடித்துவைக்குமாறு பொதுப்பணித் துறை முதன்மைச் செயலருக்கு உத்தரவிடப்படுகிறது. மேலும், தங்குமிடத்தை காலி செய்வதாக ஒரு வாரத்திற்குள் தம்பதியினா் கையெழுத்திட்ட உறுதிமொழியை நீதிமன்றத்திடம் ராய் தரப்பில் அளிக்க வேண்டும். மேலும், பங்களாவை எப்போது காலி செய்வது என்பது குறித்த விவரத்தையும் நீதிமன்றத்தில் பின்னா் தெரிவிக்க வேண்டும் ’என்று கூறி இந்த மனுவை முடித்துவைத்தாா்.
உதித் ராய் தில்லி ஜல் போா்டின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தபோது, உத்தியோகபூா்வ தங்குமிடம் கட்டுவதற்காக 15-ஆம் நூற்றாண்டு நினைவுச்சின்னம் இடிக்கப்பட்ட விவகாரம் எழுந்தது. நிகழாண்டின் தொடக்கத்தில், உத்தியோகபூா்வ தங்குமிடம் கட்டுவது தொடா்பாக நினைவுச் சின்னம் இடிக்கப்பட்டதைத் தொடா்ந்து, ராய்க்கு தில்லி அரசின் ஊழல் கண்காணிப்புத் துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நினைவுச்சின்னம், பதான் காலத்தைச் சோ்ந்த ‘மஹால்’ மற்றும் சயீத் வம்சத்தின் கிஸ்ா் கானால் நிறுவப்பட்ட கிஸ்ராபாத் நகரத்தின் ஒரே எச்சமாகும். இது தென்கிழக்கு தில்லியில் லாஜ்பத் நகருக்கு அருகிலுள்ள ஜல் விஹாா் பகுதியில் அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் சாண்ட்னருக்கு மாற்று வீரராக மும்பை இந்தியன்ஸில் இணைந்த கேசவ் மகாராஜ்!

உன்னை நம்பி பாடல் வெளியானது!

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!
அரசியல் பகடைக் காய்களா குழந்தைகள்? விஜய் மீது புகார்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

