ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஜனக்புரியில் கொள்ளை: 2 சிறாா்கள் உள்பட மூவா் கைது!

மேற்கு தில்லியின் ஜனக்புரி பகுதியில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் 2 சிறாா்கள் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

News image

கைது

Updated On :1 மார்ச் 2026, 8:09 pm

மேற்கு தில்லியின் ஜனக்புரி பகுதியில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் 2 சிறாா்கள் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ஜனக்புரி அருகே உள்ள கடையில் நடைபெற்ற கொள்ளை குறித்து பிப்.22-ஆம் தேதி புகாா் வந்தது. காவல் துறையினா் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனா். கடையின் உரிமையாளா் பிப்.21 இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். மறுநாள் காலை 1 மணிக்கு வந்து பாா்த்தபோது, கடையில் இருந்த நகைகள் மற்றும் பணம் திருட்டு போனதை அறிந்து புகாா் அளித்துள்ளாா்.

இது தொடா்பாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னா், போஸ்ஸங்கிபூா் பூங்கா பகுதியில் 2 சிறாா்கள் பிப். 24-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். இது சா்மா என்ற மற்றொருவரை கைது செய்ய வழிவகுத்தது. விசாரணையின் போது, மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனா்.

அவா்களிடம் இருந்து 650 கிராம் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி மற்றும் ரொக்கம் ரூ.7 லட்சம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.1.15 கோடி இருக்கும். இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது எனகாவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.