புது தில்லி : அரவிந்த் கேஜரிவாலை விடுவித்து சிறப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
மதுபானக் கொள்கையில் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வராகப் பதவி வகித்த மணீஷ் சிசோடியா ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சிபிஐ, விடுவிப்புக்கு எதிராக உடனடியாக மேல்முறையீடு செய்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (பிப். 27) தெரிவித்தனர்.
தில்லியில் கடந்த ஆம் ஆத்மி ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட தில்லி மதுபானக் கொள்கையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டை விசாரித்த சிபிஐ, அதில் தொடர்பிருப்பதாக மணீஷ் சிசோடியாவையும் அரவிந்த் கேஜரிவாலையும் கைது செய்தது. இதுதொடர்பான வழக்கு தில்லி நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில், அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா உள்பட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 23 பேரையும் விடுவிப்பதாக வெள்ளிக்கிழமை (பிப். 27) காலை தில்லி சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
Summary
The CBI has filed an appeal in the Delhi High Court, challenging a special court's order discharging former chief minister Arvind Kejriwal, former deputy chief minister Manish Sisodia and others in the liquor-policy case, officials said on Friday (February 27, 2026).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜகவின் விரோதி... அரவிந்த் கேஜரிவால் குறித்து மு.க. ஸ்டாலின்!

முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் கேஜரிவால் சந்திப்பு!

அரவிந்த் கேஜரிவால் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்!
துரந்தர் 3! தாதாவாக அரவிந்த் கேஜரிவால்?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


