லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மூன்று மேயர்களும் பெண்கள்?

புது தில்லி, ஏப். 18: வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய மூன்று தில்லி மாநகராட்சிகளின் மேயர்களாக பெண்களை நியமிக்க பாஜக ஆலோசனை நடத்தி வருகிறது. தெற்கு தில்லி மாநகராட்சியில் பெரும்பான்மை பெறுவதற்காக சுயேச்சை

Updated On :19 செப்டம்பர் 2012, 10:43 pm

புது தில்லி, ஏப். 18: வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய மூன்று தில்லி மாநகராட்சிகளின் மேயர்களாக பெண்களை நியமிக்க பாஜக ஆலோசனை நடத்தி வருகிறது.

தெற்கு தில்லி மாநகராட்சியில் பெரும்பான்மை பெறுவதற்காக சுயேச்சை கவுன்சிலர்களுடன் அக்கட்சித் தலைவர்கள் மும்முரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

ஏப்ரல் 21-ம் தேதியுடன் தில்லி மாநகராட்சியின் பதவிக்காலம் நிறைவடைவதால் மேயர்களைத் தேர்ந்தெடுக்க இரண்டு நாட்கள் அவகாசமே உள்ளது.

மேயர் பதவியைப் பெற மூன்று மாநகராட்சிகளிலும் அக்கட்சியில் செல்வாக்கு நிறைந்த வேட்பாளர்கள் கட்சித் தலைவர்களுக்கு மிகுந்த நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

இந்த தேர்தலில் மூன்று மாநகராட்சிகளின் மொத்த வார்டுகளில் பெண் வேட்பாளர்களுக்கு 50 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதனால் மூன்று மாநகராட்சிகளிலும் பதவிக் காலத்தின் முதலாண்டில் மேயர் பதவியை பெண் வேட்பாளர்களுக்கு வழங்க பாஜக திட்டமிட்டு வருகிறது. இதனால் ஆள், பண பலம் படைத்த ஆண் கவுன்சிலர்களின் தங்களது மேயர் பதவி ஆசையை ஒராண்டுக்கு தள்ளிப்போடும் அளவுக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் திட்டமிட்டு வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

மேயர் பதவிக்கு பரிசீலனையில் உள்ள பெயர்களாகக் கூறப்படுவது:

வடக்கு தில்லி: இந்த மாநகராட்சியில், தற்போதைய தில்லி மேயர் ரஜ்னி அபி முதலிடம் வகிக்கிறார். அவரைத் தொடர்ந்து மூத்த கவுன்சிலர் மீரா அகர்வால், ரேகா குப்தா, தில்லி பாஜக தலைவர் விஜேந்தர் குப்தாவின் மனைவி ஷோபா விஜேந்தர் ஆகியோர் பட்டியலில் உள்ளனர்.

தெற்கு தில்லி: மூன்று முறையாக தொடர்ந்து பாஜக கவுன்சிலர்களாக வெற்றி பெற்ற சவீதா குப்தா, சரிதா சௌத்ரி ஆகியோர் மேயர் பட்டியலில் உள்ளனர்.

கிழக்கு தில்லி: இந்த மாநகராட்சியில் லாலா குப்தா, கல்பனா ஜெயின், உஷா சாஸ்திரி ஆகியோர் பட்டியலில் உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.