ஓவியக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கி இன்று ஹாலிவுட் படங்கள் வரை தனது கலை படைப்புகளால் பிரமிப்பூட்டியவர் கலை இயக்குநர் தோட்டா தரணி.
சென்னை ஓவிய நுண்கலைக் கல்லூரியில் முதுநிலைப் பட்டத்தை 1971 ஆண்டு பெற்றார்.
புகழ்பெற்ற "ஃப்ரஸ்கோ ஓவியம்' கற்றுக் கொள்ளச் சென்றபோது அவரது கலைக் கண் பார்வையில் பட்ட கவர்ச்சியான ராஜஸ்தானை வண்ணமயமான ஓவியங்களில் தீட்டியுள்ளார். மாணவர் பருவத்தில், தான் கண்ட அந்த அழகிய ராஜஸ்தானை, அப்போது கிடைத்த காகிதங்கள், கலர் ஸ்கெட்ச் பேனாக்களை வைத்து ராஜஸ்தானை வண்ணமயமாகத் தீட்டியுள்ளார்.
அங்கு தங்கியிருந்த இரண்டு மாதங்களில் சுமார் 900 வரிவடிவ ஓவியங்களை வரைந்துள்ளார் தோட்டா தரணி. அதை அடிப்படையாக வைத்துத்தான் தற்போது "சம் ராஜஸ்தான்' என்ற தலைப்பில் ஓவியக் கண்காட்சியைத் தில்லியில் நடத்தி வருகிறார் கலைத்துறைக்காக "பத்மஸ்ரீ' விருது பெற்ற தோட்டா தரணி.
தில்லி லோதி எஸ்டேட் பகுதியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தின் இணைப்பு கட்டடத்தில் திங்களன்று இந்த ஓவியக் கண்காட்சி தொடங்கியது. ஒருவார காலம் நடைபெறும் இந்த ஓவியக் கண்காட்சியில், ராஜஸ்தானின் அழகை வர்ணிக்கும் 60 ஓவியங்கள் இங்கு இடம் பெற்றுள்ளன. இவரது 46வது ஓவியக் கண்காட்சியாகும்.
செரிகிராப் ஓவியங்கள்:
வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள ராஜஸ்தானில் நிழலை வைத்து கறுப்பு, வெள்ளை நிற ஓவியங்கள் வரைந்துள்ளார். இவை செரிகிராப் ஓவியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
பாலைவனத்தில் தண்ணீரைக் கொண்டு வர நடைபயணம் செய்யும் பெண்கள் மீது படும் வெயிலை வெள்ளை நிறத்திலும் அதன் நிழலைக் கறுப்பு நிறத்திலும் தீட்டி ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. கற்பனை வடிவில் வரையப்பட்டிருக்கும் இந்த கறுப்பு, வெள்ளை நிற ஓவியங்கள் பலரையும் கவர்ந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்

திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

