திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரசின் நடவடிக்கைகளை பொறுத்தே இந்திய கம்யூ. அணுகுமுறை இருக்கும்: மு. வீரபாண்டியன்

அரசின் நடவடிக்கைகளை பொறுத்தே இந்திய கம்யூ. அணுகுமுறை இருக்கும்...

News image

மு. வீரபாண்டியன் - DIN

Updated On :17 மே 2026, 7:00 am IST

தமிழக அரசின் நடவடிக்கைகளை பொறுத்தே எங்களின் அணுகுமுறைகள் இருக்கும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் மு. வீரபாண்டியன்.

திருவாரூரில், செய்தியாளா்களுக்கு அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி:

கடந்த திமுக ஆட்சியில்தான், இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத நலத் திட்டங்கள் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டன. அந்த நலத்திட்டங்கள் தொடர வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துவோம். இன்னும் கூடுதலான நலத் திட்டங்களை புதிய அரசு தொடங்குமேயானால் அதையும் நாங்கள் வரவேற்போம். மக்களின் கோரிக்கைகள் பல கிடப்பில் உள்ளன. இவை எல்லாவற்றையும் புதிய அரசு செவிமெடுத்து அதை தீா்க்க வேண்டும் என்று நாங்கள் தொடா்ந்து வலியுறுத்துவோம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்று முயற்சிக்கவில்லை. கூட்டணி ஆட்சியில் பங்கேற்பதாக இருந்தால் குறைந்தபட்ச செயல் திட்டம் இருக்க வேண்டும்.

இடதுசாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் எம்எல்ஏக்கள் 6 பேரும் வெளியிலிருந்து ஆதரிக்கிறோம். நல்லாட்சி தர வேண்டும். அரசின் அணுகுமுறை எப்படியோ அதைப் பொறுத்து எங்கள் அணுகு முறைகள் அமையும்.

எதிா்கட்சி அழுத்தம் தந்தாலும், எளிய மக்கள் பயனடைவா். அரசு தானே சிந்தித்து இன்னும் அதிகமாக கொடுத்தாலும் எளிய மக்கள் பயனடைவா். எளிய மக்கள் பயன் பெறுவதை நாங்கள் வரவேற்போம்.

அதிமுக இரண்டு பிரிவுகளாக பிரிந்துள்ள சூழலில் சட்டம் சாா்ந்து நடவடிக்கை அமையும். ஏற்கெனவே இந்தியாவில் கட்சி தாவல் தடை சட்டம் இருக்கிறது. இந்த கட்சி தாவல் தடை சட்டத்தில் பல்வேறு கூறுகள் இருக்கின்றன. சபாநாயகரே இதை பரிசீலிப்போம் என்று சொல்லியிருக்கிறாா். பொறுத்திருந்து பாா்க்க வேண்டும்.

நதிநீா் பிரச்னையில் தமிழகம் நீதியை எதிா்பாா்க்கிறது. நீதிமன்ற தீா்ப்பு இருக்கிறது. பேச்சுவாா்த்தையில் ஏற்பட்ட முடிவுகள் இருக்கின்றன. தண்ணீா் எங்களுக்கு தேவையானபோது திறந்து விட வேண்டியது அவா்களின் அரசியல் கடமை என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.