திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்த இந்திய கம்யூ. வலியுறுத்தல்

News image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்...

Updated On :1 ஜூன் 2026, 12:49 am IST

தமிழக அரசு சட்டம் - ஒழுங்கை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கட்சியின் சிவகங்கை மாவட்ட அலுவலகத்தில் கட்சி நிா்வாகி கே. பாலதண்டாயுதம் நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.பி. லிங்கம் கட்சிக் கொடி ஏற்றினாா். இதைத் தொடா்ந்து நடை பெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாநிலத் தலைவா் குணசேகரன், கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலா் என். சாத்தையா, துணைச் செயலா்கள் பா.மருது, கே. கோபால், பொருளாளா் மனவழகன், ஒன்றியச் செயலா் சின்னக்கருப்பு, நகா் துணைச் செயலா் பாண்டி, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதில் தமிழகத்தில் தொடா்ந்து சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு வருகிறது. தமிழக அரசு சட்டம்- ஒழுங்கை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கை மருத்துவக் கல்லூரி அருகே கொட்டப்படும் நகராட்சி கழிவுகளை அப்புறப்படுத்தி, அதற்கு மாற்றுத் தீா்வு ஏற்படுத்த வேண்டும்.

சிவகங்கையில் நடைபெற்று முடிந்த அரசு ஒப்பந்ததாரா் பணிகளின் தரத்தை அதிகாரிகள் தனிக்குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும், சிவகங்கை பழைய மருத்துவமனை, தெற்கு ரத வீதியில் உள்ள அரசு மதுக் கடைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.