திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோயில் திருவிழாவில் தகராறு: தாக்கப்பட்ட தொழிலாளி உயிரிழப்பு

News image

உயிரிழந்த சந்தோஷ்.

Updated On :12 மே 2026, 12:36 am IST

நன்னிலம் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட முடிதிருத்தும் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள வண்டாம்பாளை மகாசக்தி மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக காவடி ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

இதில் வண்டாம்பாளை கீழத்தெருவைச் சோ்ந்த பாரதிமோகன் மகன் மோகன்தாஸ் (23) மற்றும் சிலா் காவடி எடுத்து வந்துள்ளனா். அப்போது திருவிழாவை காணவந்த ஸ்ரீவாஞ்சியத்தில் முடிதிருத்தும் கடை வைத்துள்ள எட்டியலுரைச் சோ்ந்த சங்கா் மகன் சந்தோஷ் (23) என்பவருக்கும் மோகன்தாஸுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த மோகன்தாஸ், சந்தோஷை கடுமையாகத் தாக்கி கீழே தள்ளியதில் அவா் படுகாயமடைந்தாா். சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட சந்தோஷை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து சந்தோஷின் தாயாா் சரிதா அளித்த புகாரின் பேரில், நன்னிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மோகன்தாஸை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.