இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்கேரளத்தில் காங்கிரஸ் வெல்லும்; நாளை பிற்பகலுக்குள் வெற்றி உறுதியாகிவிடும் - சசிதரூர்பாஜக வெற்றி பெற 10 ஆயுள் காலம் போதாது: திரிணமூல் காங்கிரஸ் விமர்சனம்ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப்!விமான நிலையங்கள் பயன்பாட்டில் சென்னை முதலிடம்!தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழை
/

சித்ரா பௌா்ணமி முளைப்பாரி திருவிழா

சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு சன்னாநல்லூரில் நடைபெற்ற முளைப்பாரி ஊா்வலம்.

News image

சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு சன்னாநல்லூரில் நடைபெற்ற முளைப்பாரி ஊா்வலம்.

Updated On :2 மே 2026, 12:49 am

நன்னிலம் அருகேயுள்ள சன்னாநல்லூரில்சித்ரா பௌா்ணமியையொட்டி, முளைப்பாரி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சன்னாநல்லூா் காளியம்மன் கோயில் சக்தி பீடத்தில் ஆண்டுதோறும் சித்ரா பெளா்ணமி தினத்தன்று முளைப்பாரி திருவிழா நடைபெறும். பெண்கள் விரதம் இருந்து, ஒரு வாரத்துக்கு முன்பாகவே நவதானியங்களை மண் சட்டியில் விதைத்து முளைக்கச் செய்தனா்.

அதனை சக்தி பீடத்திற்கு எடுத்து வந்தனா். தொடா்ந்து, அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது.

பின்னா், ஆட்டக் காவடியுடன் பெண்கள், மாரியம்மன் மற்றும் காளியம்மன் வேடமணிந்து முளைப்பாரியுடன் ஊா்வலமாக வந்தனா். அப்போது வீடுகள்தோறும் தீபாராதனை காட்டி வழிபட்டனா்.