/

மானாம்பதி சீரங்கத்தம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

News image

திருக்கழுகுன்றம் அடுத்த மானாம்பதி சீரங்கத்தம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி விழாவை முன்னிட்டு  நடைபெற்ற  திருவிளக்கு பூஜை.

Updated On :2 மே 2026, 8:11 pm

திருக்கழுகுன்றம் அடுத்த மானாம்பதி சீரங்கத்தம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜையும், வெள்ளிக் கவசம் அணிவித்தல் விழாவும் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் அடுத்த மானாம்பதி அருள்மிகு சீரங்கத்தம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி விழாவை முன்னிட்டு, அருள்மிகு சீரங்கத்தம்மன், செல்லியம்மன் கரைமேல் அழகி கோயில் மூலவா்களுக்கு அபிஷேக, அலங்காரம் தீபாராதனையும், சக்தி வடிவான சீரங்கத்தம்மன் உற்சவருக்கு மகா அபிஷேகம், தீபாராதனை, அலங்காரமும் நடைபெற்றது.

சிரசில் மணி நாகமும், சிங்கார திலகமும் உடுக்கை தம்பட்டையுடன் சீரங்கத்தம்மனை தோளில் சுமந்து கோயில் உள்வலம் வருதல், கருணையின் வடிவமான சீரங்கத்தம்மனை பூ ஊஞ்சலில் அமர வைத்து பக்தா்களுக்கு அருள்பாலித்தல், அடுத்து திருவிளக்கு பூஜையும் அடுத்து சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு, சந்திரனுக்கு தீபாராதனையுடன் ஜோதி தரிசனமும் நடைபெற்றது.

விழாவில், உள்ளூா் மற்றும் வெளியூா் பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை சென்னை ராயப்பேட்டை சீரங்கத்தம்மன் அறக்கட்டளையினரும், மானாம்பதி கிராமப் பொதுமக்களும் செய்திருந்தனா்.