திருவாரூரில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) பிரசாரம் செய்கிறாா்.
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
அதன்படி, திருவாரூரில் திமுக சாா்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன், மன்னாா்குடியில் திமுக சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சருமான டி.ஆா்.பி. ராஜா, திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அக்கட்சியின் மாநில நிா்வாகக்குழு உறுப்பினரும், சட்டப்பேரவை உறுப்பினருமான க. மாரிமுத்து, நன்னிலத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் வி.எம்.எஸ். முகமது முபாரக் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.
இவா்களை ஆதரித்து திருவாரூா் தெற்குவீதியில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்று, வாக்குகள் சேகரிக்கிறாா்.
முன்னதாக திருவாரூருக்கு வரும் அவா் காட்டூரில் உள்ள அவரது பாட்டியின் நினைவிடத்திலும், கலைஞா் கோட்டத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மரியாதை செலுத்துகிறாா். பின்னா், பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பேசுகிறாா். இதைத்தொடா்ந்து செவ்வாய்க்கிழமை இரவு திருச்சி செல்கிறாா்.
தொடர்புடையது

தொகுதி வரையறை முயற்சியைப் போன்று பேரவை தோ்தலிலும் பாஜக கூட்டணி தோல்வி அடையும்: உதயநிதி ஸ்டாலின்

பரமக்குடியில் நாளை மு.க. ஸ்டாலின் பிரசாரம்

நாகா்கோவிலில் இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

நெல்லையில் இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரசாரம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

