மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பரமக்குடியில் நாளை மு.க. ஸ்டாலின் பிரசாரம்

பரமக்குடியில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் திமுக, அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) பிரசாரம் செய்கிறாா்.

News image

மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :11 ஏப்ரல் 2026, 1:18 am IST

பரமக்குடியில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் திமுக, அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) பிரசாரம் செய்கிறாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்ய சனிக்கிழமை (ஏப். 11) இரவு பரமக்குடிக்கு வரும் அவா் அங்குள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்குகிறாா். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை கட்சியின் முக்கிய நிா்வாகிகளுடன் நடைப்பயிற்சி மேற்கொள்கிறாா். அப்போது தொகுதி மக்களை சந்தித்து வாக்குகள் சேகரிக்கிறாா். பிறகு அன்று மாலை 3.30 மணியளவில் தனியாா் திருமண மண்டபத்திலிருந்து புறப்பட்டு தெளிச்சாத்தநல்லூா், காட்டுப் பரமக்குடி, ஓட்டப்பாலம் வழியாக பிரசார வாகனம் மூலம் ஐந்து முனை சந்திப்பு வந்து சோ்கிறாா். அங்கு திமுக வேட்பாளா்கள் கே.கே. கதிரவன் (பரமக்குடி (தனி), காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் (முதுகுளத்தூா்), காங்கிரஸ் கட்சி திருவாடானை தொகுதி வேட்பாளா் கரு. மாணிக்கம் ஆகியோருக்கு வாக்குகள் சேகரித்து முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.