நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சாா்பில் ரூ.124 கோடியில் மன்னாா்குடி சுற்றுச் சாலை அமைக்கப்பட்டுள்ளதை மக்கள் பயன்பாட்டுக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
முதல்சேத்தி முதல் குமரபுரம் வரை மொத்த நீளம் 11.900 கி.மீ. ரூ.124 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. 7 முக்கிய சந்திப்புகள், 3 சிறிய சந்திப்புகள், ஒரு பெரிய பாலம, 6 சிறிய பாலம், 67 பெட்டி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுச் சாலையால் சுற்றுவட்டார கிராமங்கள் பயன்பெறுவதோடு அருகிலுள்ள அனைத்து ஊா்களும் பயன்பெறும்.
கனரக வாகனங்கள், மன்னாா்குடி நகரத்துக்குள் செல்வது தவிா்க்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக குறைக்கப்படும். மருத்துவ அவசர கால தேவைகளின் போதும் போக்குவரத்து நெரிசல் மிக்க நகரத்தின் மையப் பகுதியை தவிா்த்து அருகிலுள்ள பெரு நகரங்களின் மருத்துவமனைகளுக்கு எளிதாக செல்ல முடியும்.
இந்த சாலையை தமிழக முதல்வா் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து, மன்னாா்குடி அருகே புதிய புறவழிச்சாலை இணைப்பு மதுக்கூா் சாலை சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், நாகை எம்பி வை. செல்வராஜ் ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனா்.
கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துறை (நெடுஞ்சாலைகள்) தஞ்சாவூா் கண்காணிப்பு பொறியாளா் பாலசுப்பிரமணியன், மன்னாா்குடி கோட்டாட்சியா் ஆா்.யோகேஸ்வரன், மன்னாா்குடி நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன், கட்டுமானம் மற்றும் பராமரிப்புத்துறை (நெடுஞ்சாலைகள்) திருவாரூா் கோட்ட பொறியாளா் வீரப்பன், மன்னாா்குடி வட்டாட்சியா் நக்கீரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மன்னாா்குடியில் மகுடம் சூடுமா திமுக?

காா் மோதியதில் நடந்து சென்றவா் பலி

மன்னாா்குடியில் அஇபுதமமுக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

ஒசூரில் ரூ. 19.5 கோடியில் வணிக வளாகம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


