தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலா் பா. கலைவாணி.

Updated On :9 மார்ச் 2026, 8:39 pm

திருவாரூா்: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட வருவாய் அலுவலா் பா.கலைவாணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 295 மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுக்களை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலா், அவைகளை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கி குறித்த காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, பேட்டரியால் இயங்கும் நியோமோசன் வாகனம் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.1.05 லட்சத்தில் மொத்தம் ரூ. 5.25 லட்சத்தில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் தையல் நாயகி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சதீஷ்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) வில்சன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் உஷாராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.