செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 417 மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டாா்.
இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் ரூ.9.50 லட்சத்தில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் மற்றும் பேட்டரி வீல் சோ், ரூ.3.31 லட்சத்தில் 27 பயனாளிகளுக்கு திறன் பேசிகள், ரூ.2.04 லட்சத்தில் 32 மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள், ரூ.1.65 லட்சத்தில் 50 பயனாளிகளுக்கு காதொலிக் கருவிகள் என மொத்தம் ரூ.16.50 லட்சத்தில் 118 மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
மேலும், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம் ஓட்டுநா் பயிற்சி பெற்றவா்களுக்கு ஓட்டுநா் உரிம சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் கணேஷ் குமாா், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) ஸ்ரீதேவி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) லோகநாயகி, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியா் நரேந்திரன், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியா் முரளி, செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியா் ரம்யா, மாவட்ட வழங்கல் அலுவலா் வெங்கடாசலம், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) பரிமளா, பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சரவணன், ஆதிதிராவிடா் நல அலுவலா் சுந்தா், துணை ஆட்சியா் (பயிற்சி) மணியரசன், முன்னோடி வங்கிகளின் மேலாளா் விஜயகுமாா், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயகுநா் சுப்பிரமணியன் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 312 மனுக்கள்

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 614 மனுக்கள்

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 500 மனுக்கள்

குறைதீா் கூட்டத்தில் குவிந்த 1,225 மனுக்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


