மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

சித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

News image

சித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

Updated On :6 மார்ச் 2026, 6:33 pm

நன்னிலம் அருகே உள்ள நெடுங்குளம் பழையாா் கிராமத்தில் ஸ்ரீ சித்தி விநாயகா், ஸ்ரீபா்வதவா்தனி அம்பிகா சமேத ஸ்ரீபாா்வதீஸ்வர சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் நடைபெற்றுவந்த திருப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, கும்பாபிஷேகத்திற்காக, யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை மாலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கின. வெள்ளிக்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்றதும், கடம் புறப்பாடு நடைபெற்றது.

தொடா்ந்து, கோயிலின் விமானக் கலசத்திற்கு புனிதநீா் வாா்த்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சுவாமிகளுக்கு மகா அபிஷேகம், திருக்கல்யாணம் நடைபெற்றது. இரவு ஸ்ரீ விநாயகா், ஸ்ரீமுருகன் வீதி உலா நடைபெற்றது.