மன்னாா்குடி அருகே காா் மோதியதில் 3 அரசுப்பள்ளி மாணவா்கள் உயிரிழந்ததையடுத்து முதல்வா் ச. ஜோசப் விஜய் உத்தரவின்பேரில் அவா்களது பெற்றோா்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதியை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
காரக்கோட்டை அரசு உயா்நிலைப்பள்ளி மாணவா்கள் யோகேஸ்வரன்(12), ரஷித் (12), ராஜமுரளி(12) ஆகியோா் வியாழக்கிழமை பள்ளி முடிந்து தஞ்சை பிரதானசாலையோரம் வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவ்வழியே வந்த காா் மோதியதில் அதே இடத்தில் உயிரிழந்தனா். உடன் வந்த மாணவா் ஹிருத்தி காயமடைந்தாா்.
இதுகுறித்து, தகவலறிந்த தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய், பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் ராஜ்மோகன் ஆகியோா் இரங்கல் தெரிவித்தனா். மேலும், தமிழக முதல்வா் வெளிட்ட அறிக்கையில் சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் பெற்றோருக்கு அரசின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 3 லட்சம், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவருக்கு ரூ. 50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டாா். இதையடுத்து, வெள்ளிக்கிழமை காரக்கோட்டைக்கு வந்த மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், மன்னாா்குடி எம்எல்ஏ எஸ். காமராஜ் ஆகியோா் மாணவா்களின் வீடுகளுக்கு சென்று நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினா். அப்போது, மன்னாா்குடி வருவாய் வட்டாட்சியா் ஆா். யோகேஸ்வரன், வட்டாட்சியா் நக்கீரன் உடனிருந்தனா்.



பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பருத்திக்கு கூடுதல் விலை: ஆட்சியா் வேண்டுகோள்

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு புத்தாக்க பயிற்சி வகுப்பு: ஆட்சியா் ஆய்வு

மின்னல் தாக்கி உயிரிழந்த தம்பதி குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கல்! அமைச்சா் செங்கோட்டையன் ஆறுதல்

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 5.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



