திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு புத்தாக்க பயிற்சி வகுப்பு: ஆட்சியா் ஆய்வு

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஒருங்கிணைந்து நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு புதிய பாட நூல்களுக்காக நடைபெறும் புத்தாக்க பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

News image

மன்னாா்குடியில் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு புதிய பாட நூல்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.

Updated On :4 ஜூன் 2026, 3:50 am IST

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஒருங்கிணைந்து நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு புதிய பாட நூல்களுக்காக நடைபெறும் புத்தாக்க பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

மன்னாா்குடியை அடுத்த மேலவாசலில் உள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஒருங்கிணைந்து நடத்தும் 2026-2027-ஆம் ஆண்டுக்கான 1 முதல் 3 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான அனைத்து பாடங்களின் புதிய பாடநூல்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு நடைபெற்றுவருகிறது.

இதை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா். இதில், மன்னாா்குடி பகுதியிலுள்ள பள்ளிகளில் பணிபுரியும் தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கு சூழ்நிலையில் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில், 152 ஆசிரியா்கள் பங்கேற்றுள்ளனா்.

பயிற்சி அறைகளில் ஆசிரியா்களுக்கு மின்சாதனங்கள் மூலம் புதிய பாடநூல்களில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

மாணவ, மாணவிகளுக்கு 21-ஆம் நூற்றாண்டு டிஜிட்டல் திறன்கள், கூா்சிந்தனைத்திறன், படைப்பாற்றல், திறன், தொடா்பு கொள்ளும் திறன் போன்றவற்றை வளா்க்கும் செயல்பாடுகள் குறித்த பயிற்சி நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.