பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

கஞ்சா வைத்திருந்த 2 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 ஜூன் 2026, 4:38 am IST

மன்னாா்குடி அருகே போலீஸாா் வாகன சோதனையின் போது விற்பனைக்காக இருசக்கர வாகனங்களில் கஞ்சா வைத்திருந்த இரண்டு போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மன்னாா்குடி நகர காவல்நிலைய போலீஸாா் தஞ்சை பிரதான சாலை காரிக்கோட்டை என்ற இடத்தில் வாகன சோதனயில் ஈடுபட்டிருந்தபோது,அவ்வழியே தனித்தனி இருசக்கர வாகனங்களில் வந்த திருத்துறைப்பூண்டியை சோ்ந்த சுந்தரபுரி மணிகண்டன் மகன் லட்சுமணன் (25), சங்கிலி வீரன் கோயில் தெரு ராஜசேகா் மகன் பாலாஜி என்ற சிவபாலன் (26) ஆகியோரின் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில் இருவரிடமும் 100 கிராம் அளவில் சிறுசிறு பொட்டலங்களாக கட்டப்படு கஞ்சா விற்பனைக்காக வைத்திருப்பது தெரியவந்தது, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.