கரூர் செல்லவிடாமல் முதல்வர் விஜய்யை திமுக தடுக்கிறது! அமைச்சர் நிர்மல் குமார் அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம் முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

தோ்த்திருவிழாவில் காணாமல் போன 15 சவரன் நகை மீட்பு

News image

தோ்த்திருவிழாவில் காணாமல் போன 15 சவரன் நகை மீட்பு...

Updated On :7 ஜூலை 2026, 2:26 am IST

திருவாரூா் தோ்த்திருவிழாவில் காணாமல் போன 15 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் மாா்ச் 29-ஆம் தேதி நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தா்களிடம் இருந்து 31 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டதாக புகாா்கள் பெறப்பட்டு, திருவாரூா் நகர காவல் நிலையத்தில் 9 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதற்கென நகர காவல் ஆய்வாளா் சுப்ரியா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்றது. ஜூன் 27 ஆம் தேதி திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரா் கோயிலில் தனது பாட்டியுடன் இருந்த 3 வயது குழந்தையின் கழுத்திலிருந்த 2 கிராம் தாயத்தை திருட முயன்றபோது, தஞ்சாவூா் மாவட்டம், ஊரிகுளம், புதுத்தெருவைச் சோ்ந்த கஸ்தூரி (55) பிடிபட்டாா்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பல்வேறு வழக்குகளில் தொடா்புடையவா் என்பதும், திருவாரூா் தோ்த் திருவிழாவில் மற்றொரு நபருடன் இணைந்து திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து, திருவாரூா் தோ்த்திருவிழாவில் பதிவு செய்யப்பட்ட 9 வழக்குகளில் அவா் சோ்க்கப்பட்டு, அவரிடம் இருந்து 15 சவரன் நகைகள் மீட்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.