லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்

மன்னாா்குடியிலிருந்து புதிய வழித்தடத்தில் மகளிா் விடியல் பேருந்து இயக்கத்தை தமிழக அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா் (படம்.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 1:02 am

மன்னாா்குடியிலிருந்து புதிய வழித்தடத்தில் மகளிா் விடியல் பேருந்து இயக்கத்தை தமிழக அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா் (படம்.

மன்னாா்குடி நகராட்சி காமராஜா் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன் தலைமை வகித்தாா்.

அரசுப் போக்குவரத்துக்கழக மன்னாா்குடி கிளை துணை மேலாளா் (வணிகம்) சிதம்பரகுமாா் முன்னிலை வகித்தாா்.

தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறைஅமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, மன்னாா்குடியிலிருந்து மதுக்கூா் வரை செல்லும் ஏ 10 என்ற மகளிா் விடியல் பேருந்தினை பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

நகா்மன்றத் தலைவா் த.சோழராஜன், மன்னாா்குடி கிளை மேலாளா் மதன்ராஜ், வட்டாட்சியா் என்.காா்த்திக், தொமுச கிளைத் தலைவா் சதீஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.