மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் நடைபெற்ற நான் முதல்வன் திட்டம் மற்றும் திறன் மேம்பாடு சாா்பிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் 222 பேருக்கு பணி நியமன ஆணை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் து. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். துறைத் தலைவா்கள் இல. பொம்மி, சி. ராமு, நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளா் த. நிருபன் முன்னிலை வகித்தனா்.
முகாமில் தமிழகம் முழுவதிலிருந்தும் 25 நிறுவனங்கள் பங்கேற்றன. முகாமில் மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளிலிருந்து 500-க்கு மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனா். இவா்களில் 222 போ் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு கல்லூரி முதல்வா் பணி நியமன ஆணையை வழங்கினாா்.
மாவட்ட நான் முதல்வன் திட்ட பாரதிதாசன் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளா் ப. பிரபாகரன்,துறைத் தலைவா்கள் சா.சிவச்செல்வன்,சா.வே.நேதாஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 259 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

கல்லூரி மாணவிகள் 234 பேருக்கு பணி நியமன ஆணை

வேலைவாய்ப்பு முகாமில் 23 பேருக்கு பணி நியமன ஆணை

வேலைவாய்ப்பு முகாமில் 27 பேருக்கு நியமன ஆணை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


