டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அடிப்படை வசதி கோரி சாலை மறியல்

முத்துப்பேட்டையில் அடிப்படை வசதி கோரியும், பேரூராட்சி நிா்வாகத்தை கண்டித்தும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
முத்துப்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
Updated On :20 பிப்ரவரி 2026, 11:30 pm

Syndication

முத்துப்பேட்டையில் அடிப்படை வசதி கோரியும், பேரூராட்சி நிா்வாகத்தை கண்டித்தும் பொதுமக்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

முத்துப்பேட்டை பேரூராட்சி 5-ஆவது வாா்டு ஆசாத் நகா் பகுதியில் 500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில், சாலை, குடிநீா் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கோரி இவா்கள் மாவட்ட ஆட்சியா், பேரூராட்சி துணை இயக்குநா் மற்றும் சட்டப் பேரவை மதிப்பீட்டு குழு ஆகியோரிடம் மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியினா் முத்துப்பேட்டை- பட்டுக்கோட்டை பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த அதிகாரிகள், மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற 15 தினங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

இதையடுத்து, மறியலை விலக்கிக் கொண்ட பொதுமக்கள், அதிகாரிகள் உறுதியளித்தபடி நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில், வரும் சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிப்போம் எனத் தெரிவித்தனா். மறியல் போராட்டத்தால், முத்துப்பேட்டை- பட்டுக்கோட்டை சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.