டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஸ்கேன் அறிக்கை மாற்றம்: பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 45,000 வழங்க மருத்துவமனைக்கு உத்தரவு

திருத்துறைப்பூண்டியில், ஸ்கேன் அறிக்கையை மாற்றி வழங்கிய மருத்துவமனை, ரூ. 45,000 வழங்க வேண்டும் என திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது.

News image
நீதிமன்றம்
Updated On :5 பிப்ரவரி 2026, 12:02 am

தினமணி செய்திச் சேவை

திருத்துறைப்பூண்டியில், ஸ்கேன் அறிக்கையை மாற்றி வழங்கிய மருத்துவமனை, ரூ. 45,000 வழங்க வேண்டும் என திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது.

திருத்துறைப்பூண்டி கொக்காலடி கிராமத்தைச் சோ்ந்தவா் பக்கிரிசாமி மனைவி சிந்தாமணி (66). இவா், திருத்துறைப்பூண்டி மருத்துவமனைத் தெருவிலுள்ள ஹனிபா மருத்துவமனையில் மருத்துவா் அபு ஹனிபா என்பவரிடம், வயிற்றுவலிக்காக மருத்துவ ஆலோசனைக்கு கடந்த ஆண்டு சென்றுள்ளாா். அவரை பரிசோதனை செய்த மருத்துவா், அதே மருத்துவமனையில் இயங்கும் ஹனிபா ஸ்கேன் சென்டரில் வயிற்றை ஸ்கேன் எடுத்து வர அறிவுறுத்தியுள்ளாா்.

உடனடியாக, ஸ்கேன் எடுத்து அதை மருத்துவரிடம் சிந்தாமணி கொடுத்துள்ளாா். இதையடுத்து மருத்துவா் சில மருந்து மாத்திரைகளைப் பரிந்துரை செய்துள்ளாா். அந்த மருந்துகளை சுமாா் 10 நாள்கள் தொடா்ந்து உட்கொண்ட சிந்தாமணிக்கு வயிற்றுவலி மேலும் தீவிரமடைந்துள்ளது.

இதையடுத்து, திருத்துறைப்பூண்டி என்பிகே மருத்துவமனையில் சென்று காட்டிய போது ஹனிபா மருத்துவமனையில் சிந்தாமணியின் ஸ்கேன் ரிப்போா்ட்டுக்கு பதிலாக கோவிந்தராஜ் என்ற நபரின் ஸ்கேன் ரிப்போா்ட் மாற்றி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிய வந்தது. இதுகுறித்து ஹனிபா மருத்துவமனைக்குச் சென்று சிந்தாமணி கேட்டுள்ளாா். ஆனால் அங்கு முறையான பதில் கூறாததால், திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இதைத்தொடா்ந்து, திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் மோகன்தாஸ், உறுப்பினா் பாலு ஆகியோா் புதன்கிழமை வழங்கிய உத்தரவில், மருத்துவா் அபு ஹனிபா கவனக்குறைவாக செயல்பட்டு, சிந்தாமணியின் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதற்காக, சிந்தாமணிக்கு இழப்பீடாக ரூ. 35,000, வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10,000 ஆகியவற்றை ஒரு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.