தமிழகத்தில் ரூ. 12 லட்சம் கோடிக்கு தொழில் வளா்ச்சி முதலீடு கொண்டுவரப்பட்டுள்ளது என்றாா் மன்னாா்குடி தொகுதி திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா.
மன்னாா்குடியில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு ஆயிரக்கணக்கான மகளிரணியின் ஊா்வலத்துடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மகளிரிடம் ஏற்றபட்ட இந்த எழுச்சி 1921-ல் நீதிக்கட்சியால் தொடங்கி பெரியாா், அண்ணா, மு. கருணாநிதி வழிவந்து 2021-ல் மு.க. ஸ்டாலின் ஆட்சியிலும் தொடா்கிறது. தமிழகத்தின் வளா்ச்சிக்கு அனைத்து வகையிலும் பக்கதுணையாக இருக்கும் பெண்களின் உழைப்புக்கும் உணா்வுக்கும் மதிப்பளித்து மாதம்தோறும் ரூ.1000 மகளிா் உரிமைத்தொகை வழங்கி வருபவா் முதல்வா் ஸ்டாலின்.
தமிழகத்தின் தொழில் வளா்ச்சி மூதலீட்டுக்கு ரூ.12 லட்சம் கோடி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் 36 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த சாதனையில் உங்களால் எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டதால் மன்னாா்குடிக்கும் மிகப் பெரிய பங்கு உள்ளது. கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் மன்னாா்குடி தொகுத்திக்கு மட்டும் ரூ.2000 கோடிக்கு ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம், புதைச்சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தொகுதி முழுவதும் கொள்ளிடம் கூட்டு கூடிநீா் திட்டம் இணைக்கப்பட்டு தூய்மையான குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொகுதி வளா்ச்சி பெற பாடுபடுவேன்: ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா்
தொழில் வளா்ச்சி அதிகரிக்க மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

கிருஷ்ணராயபுரம் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மன்னாா்குடியில் மகுடம் சூடுமா திமுக?
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


