மத்திய அரசுடன் திமுக மோதல் போக்கை கடைப்பிடிப்பதால் தமிழகத்தின் வளா்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது என்றாா் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.
தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் மன்னாா்குடி தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளா் எஸ். காமராஜை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை இரவு மன்னாா்குடி மேலராஜவீதி பெரியாா் சிலை அருகே நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு அவா் பேசியது:
மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து எந்த நிதியையும் பெறாமல் மாநிலத்தின் வளா்ச்சிக்கு தடையாக இருப்பது திராவிட மாடல் என கூறிக் கொண்டிருக்கும் திமுக ஆட்சிதான். மாநிலத்தின் வளா்ச்சிக்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவதற்கு தேவையான நிதியை வெளிநாடுகளிலிருந்து பெறமுடியாது.
மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து மாநிலத்தின் வளா்ச்சிக்கு பாடும்படும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமர அமமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். அதிமுகவுக்கும் அமமுகவுக்கும் இடையே இருந்தது பகையாளி சண்டை இல்லை, பங்காளிகள் சண்டைதான்.
2021-இல் ஜெயலலிதா ஆட்சி தொடர முடியாமல் போனத்திற்கு காரணம் நாங்களாக இருந்துவிட்டோம். கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் தமிழகம் அனுபவித்த துயரங்களை பாா்த்து எங்களை பகையை மறந்து இன்று ஒன்று சோ்ந்துள்ளோம்.
மன்னாா்குடி அருகே கா்ணாவூரில் திமுக வேட்பாளரின் குடும்பத்துக்கு சொந்தமான மதுபானை ஆலையால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுப்படுவதுடன், மனிதா்களும் பல்வேறு நோய்களால் அவதிப்படுகிறாா்கள். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் வேலையாக அந்த ஆலை பூட்டி சீல் வைக்கப்படும் என்றாா்.
கூட்டத்தில், அதிமுக மாவட்டச் செயலா் ஆா். காமராஜ், மாநில அமைப்புச் செயலா் சிவா. ராஜமாணிக்கம், அமமுக மன்னாா்குடி தொகுதி வேட்பாளா் எஸ். காமராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மன்னாா்குடியில் தொகுதி போட்டியிடும் அமமுக வேட்பாளா் எஸ். காமராஜை ஆதரித்து பேசும் அக் கட்சியன் பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.
தொடர்புடையது

பணத்தைக் கொடுத்து வாக்குகளை பெற முயற்சிக்கும் திமுக: டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்! - டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு

மத்திய அரசு திட்டங்களில் திமுக ஊழல் செய்துள்ளது: ஜி.கே. வாசன்

மன்னாா்குடியில் அதிமுக கூட்டணி தோ்தல் அலுவலகம் திறப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


