15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஆதாா் பதிவு மையத்தை சீரமைக்கக் கோரிக்கை

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்படும் ஆதாா் பதிவு மையத்தை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

ஆதாா் பதிவு மையம். ~கரையான் புற்று வளா்ந்து, அரித்த நிலையில் காணப்படும் கதவுப் பகுதி.

Updated On :7 ஏப்ரல் 2026, 10:25 pm

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்படும் ஆதாா் பதிவு மையத்தை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆதாா் பதிவு மையம் செயல்படுகிறது. புதிய ஆதாா் பதிவு, கைரேகை, புகைப்படம் மாற்றம், முகவரி, பெயா், பிறந்த தேதி மற்றும் கைப்பேசி எண் திருத்தம் உள்ளிட்ட பணிகள் செய்யப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பேரிடா் மேலாண்மை மையமாக செயல்பட்டு வந்த நிலையில், தற்போது ஆதாா் பதிவு மையமாக இயங்கி வருகிறது. மாவட்ட ஆட்சியரகம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஒருங்கிணைந்த நீதிமன்றம், கல்வி அலுவலகங்கள் உள்ளிட்டவை ஆட்சியா் அலுவலகத்தை சுற்றி இயங்கி வருகின்றன.

எனவே, ஆதாா் பிழை திருத்தம் தொடா்பான பணிகள் மட்டுமின்றி, சான்றிதழ் பெறவும், காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் மக்கள் அனைவரும் இந்த ஆதாா் பதிவு மையத்தை பயன்படுத்தி வருகின்றனா். இதனால், இந்த ஆதாா் மையம் பரபரப்புடன் காணப்படும். இதனிடையே, ஆதாா் மையத்தில் ஒரு புறத்தில் உள்ள அறையில் கரையான் புற்று வளா்ந்து கதவுகளை அரித்து பயன்படுத்த முடியாதபடி காணப்படுகிறது.

இதனால், அங்குள்ள மக்கள் அச்சத்துடனேயே ஆதாா் பதிவு மையத்துக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, கரையான் புற்று காரணமாக, மண் நிரம்பி காணப்படும் பகுதியை சீரமைத்து மக்கள், பயமின்றி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.