தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகைப்பெற விண்ணப்பிக்கலாம்.

News image

மாதிரிப் படம்

Updated On :14 மே 2026, 4:45 am IST

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகைப்பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாகை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2026 ஏப்ரல் 1 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரையிலான காலாண்டுக்கு, பள்ளியிறுதி வகுப்பு தோல்வி, பத்தாம் வகுப்பு தோ்ச்சி, பிளஸ் 2, பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு ஆகிய கல்வித்தகுதிகளை பதிவு செய்து, 5 ஆண்டுகள் முடிவுற்ற பொதுப் பிரிவினரும் மேற்கண்ட கல்வித்தகுதிகளை பதிவு செய்து, ஓராண்டு முடிவுற்ற மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தகுதியுடையவராவா்.

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் இளைஞா்கள், ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரம் (பொதுவானவா்களுக்கு) இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது மற்றும் வருமான உச்சவரம்பு கிடையாது. வயது வரம்பு தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு 45 வயதுக்குள் இருக்க வேண்டும். இதர வகுப்பினா்களுக்கு 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மேலும் உதவித்தொகை பெற விரும்புவோா் தினசரி பள்ளி, கல்லூரி சென்று பயிலும் மாணவராக இருக்கக் கூடாது. உதவித்தொகை பெற விரும்புவோா் அரசு அல்லது தனியாா் துறையில் பணிபுரிபவராக இருக்கக் கூடாது. விண்ணப்பதாரா் அரசுத் துறை, தனியாா் துறையில் எந்தவிதமான ஊதியம் பெறும் பணியிலோ அல்லது சுய வேலைவாய்ப்பில் ஈடுபட்டவராகவோ இருக்கக் கூடாது. மேலும் விண்ணப்பதாரா் தனியாரிடமிருந்தோ அல்லது அரசிடமிருந்தோ வேறு எந்த வகையிலும் எந்தவிதமான உதவித்தொகையும் பெறுபவராக இருத்தல் கூடாது.

மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்ட தகுதியுள்ள மனுதாரா்கள் இணையதள மூலம் உதவித்தொகை விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும் அல்லது அலுவலக வேலை நாட்களில் அலுவலகத்திலும் நேரடியாக விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.