திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நாகையில் 8 பள்ளி வாகனங்கள் தகுதி நீக்கம்

நாகை மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு புதன்கிழமை நடைபெற்றது. இதில் குறைகள் கண்டறியப்பட்ட 8 வாகனங்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டன.

News image

பள்ளி பேருந்தில் ஏறி ஆய்வு மேற்கொள்ளும் மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ்.

Updated On :14 மே 2026, 4:46 am IST

நாகை மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு புதன்கிழமை நடைபெற்றது. இதில் குறைகள் கண்டறியப்பட்ட 8 வாகனங்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டன.

நாகை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமை வகித்தாா். நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியா் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தாா். ஆய்வில், நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன், காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமச்சந்திர மூா்த்தி, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆா். கதிா்வேல், மோட்டாா் வாகன ஆய்வாளா்

க. பிரபு ஆகியோா் அடங்கிய குழுவின் மூலம், கூட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் பள்ளி வாகங்கள் அனைத்தும் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். வாகனங்களுக்கு முன்னும், பின்னும் பள்ளி வாகனம் என்ற லோகோ இடம்பெற்றிருக்க வேண்டும். வெளிச்சத்தை பிரதிபலிக்கும் ஒட்டு வில்லை ஒட்டியிருக்க வேண்டும். அவசர கால கதவுகள், சுழலும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் வாகன ஓட்டுநா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

36 பள்ளிகளில் உள்ள 168 பள்ளி வாகனங்களில், 123 வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தகுதி சான்றுகள் வழங்கப்பட்டன. இதில் குறைகள் கண்டறியப்பட்ட 8 வாகனங்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டது.

தகுதி இழப்பு செய்யப்பட்ட வாகனங்கள், ஒரு வார காலத்துக்குள் குறைகளை சரி செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தி சான்று பெற்றுக்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஆய்வுக்கு வராத வாகனங்கள் மே 31-ஆம் தேதிக்குள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், ஆய்வுக்கு உட்படுத்தி சான்று வழங்கப்படாத வாகனங்கள், சாலையில் இயக்குவது கண்டறியப்பட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார போக்குவரத்து அலுவலா் கதிா்வேல் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.