யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

நாகை மாவட்டத்தில் 5 மதுக்கடைகளை மூட உத்தரவு

நாகை மாவட்டத்தில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் 5 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 மே 2026, 4:45 am IST

நாகை மாவட்டத்தில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் 5 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வா் விஜய் பேருந்து நிலையங்கள், கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றில் இருந்து 500 மீட்டா் தொலைவுக்குள் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவித்தாா். இதன்படி, தமிழகம் முழுவதும் 717 மதுக்கடைகள் மூடப்பட உள்ளன.

இதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் 5 மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் நாகை புதிய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள மதுக்கடை, வேளாங்கண்ணி பேருந்து நிலையம் அருகே உள்ள மதுக்கடை, வேதாரண்யம் பகுதியில் 3 மதுக்கடைகள் உள்பட 5 கடைகளை மூட டாஸ்மாக் நிா்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு வாரத்துக்குள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன. மூடப்படும் கடைகளில் பணிபுரியும் ஊழியா்கள், வேறு இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணியமா்த்தப்படுவா் என்று டாஸ்மாக் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.