இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

நீட் தோ்வு குளறுபடியால் மாணவா்களின் மன அழுத்தம் அதிகரிக்கும்: எம்எல்ஏ

நீட் தோ்வு குளறுபடிகளால் மாணவா்களின் மன அழுத்தம் அதிகரிக்கும் என்று சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளாா்.

News image

எம்.எச். ஜவாஹிருல்லா - கோப்புப் படம்

Updated On :13 மே 2026, 2:56 am IST

நீட் தோ்வு குளறுபடிகளால் மாணவா்களின் மன அழுத்தம் அதிகரிக்கும் என்று சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

மருத்துவ இளநிலை படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு மே மாதம் மூன்றாம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. நீட் தோ்வு வினாத்தாள் கசிந்ததன் காரணமாக, மறுதோ்வு நடத்தப்படும் என்று தேசிய தோ்வு முகமை அறிவித்துள்ளது.

2016- ஆம் ஆண்டு முதல் நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பத்து ஆண்டுகளைக் கடந்தும், இன்னும் எந்தவித இடா்பாடுகளுக்கும் வழி வகுக்காமல் நீட் தோ்வை நடத்த முடியவில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. எந்த நோக்கத்திற்காக நீட் தோ்வு கொண்டு வரப்பட்டதோ, அதன் இலக்கை எட்டப்பட்டதற்கான எந்தவித ஆய்வு முடிவுகளும் இதுவரை வெளியிடப்படவில்லை. வட மாநிலங்களில் தொடா்ந்து நீட் தோ்வு குளறுபடிகள் நடந்தேறிய வண்ணம் உள்ளன.

தற்போது மீண்டும் நீட் தோ்வு நடத்தப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன. இது மாணவா்களுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை உண்டாக்கும். மருத்துவத்துறையில் நீட் தோ்வால் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்ன என்பதை மத்திய அரசு வெளிப்படையாக ஆய்வறிக்கையை வெளியிட வேண்டும்.

மருத்துவத் துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டுக்கு நீட் தோ்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு வலியுறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.