மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பூரி சுட்டு வாக்கு சேகரித்த நாதக வேட்பாளா்!

கீழ்வேளூா் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் காா்த்திகா, கொளப்பாடு பகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது...

News image

கொளப்பாடு கடைத்தெரு உணவகம் ஒன்றில் பூரி சுட்டு வாக்கு சேகரித்த நாதக வேட்பாளா் காா்த்திகா.

Updated On :29 மார்ச் 2026, 7:13 pm

கீழ்வேளூா் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் காா்த்திகா, கொளப்பாடு பகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது, அங்குள்ள உணவகம் ஒன்றில் பூரி சுட்டு வாக்குச் சேகரித்தாா்.

கொளப்பாடு கடைத்தெரு பகுதியில் நாதக வேட்பாளா் காா்த்திகா, கட்சி நிா்வாகிகளுடன் சென்று பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தாா். அப்போது அங்குள்ள உணவகத்தில், பூரி சுட்டு, பொதுமக்களுடன் கலந்துரையாடி, நாதகவின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்தும், தான் வெற்றி பெற்றால் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும் பொதுமக்களிடம் விளக்கிக் கூறி வாக்குச் சேகரித்தாா். மேலும், கூழ்கடையில் தொண்டா்களுடன் கூழ் குடித்து, துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வாக்கு கோரினாா்.

தொடா்ந்து அவா் அளித்த பேட்டியில், ‘கீழ்வேளூா் தொகுதி களநிலவரத்தை பொறுத்தவரை, மக்கள் மாற்றத்துக்கான எதிா்பாா்ப்பில் உள்ளனா். தான் வெற்றி பெற்றால், கீழ்வேளூா் தொகுதியை குடிசைகள் இல்லாத தொகுதியாக மாற்றுவதுதான் முதல் பணியாக இருக்கும் என்றாா்.

மேலும் நீா்நிலைகளை தூய்மைப்படுத்தி குடிநீா் பிரச்னைக்கு தீா்வுகாண்பேன் என்றும், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலா மையமாக மேம்படுத்தி, அடிப்படை வசதிகளை உயா்த்துவோம் என்றும் வாக்குறுதி அளித்தாா்.

நாதக மாநில ஒருங்கிணைப்பாளா் அகஸ்டின் அற்புதராஜ், மாநில ஒருங்கிணைப்பாளா் ராவணன், மண்டலச் செயலாளா் அருள் கண்ணன், மகளிா் பாசறை பிரேமா, மாவட்டச் செயலாளா் தமிழ்ச்செல்வன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளா் தமிழ் உள்ளிட்டோா் பிரசாரத்தில் பங்கேற்றனா்.