தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

சாலையில் கழிவுநீா்; பொதுமக்கள் அவதி

நாகை 25-ஆவது வாா்டு பிரதான சாலையோரம் தேங்கி நிற்கும் கழிவுநீா்.

News image

நாகை 25-ஆவது வாா்டு பிரதான சாலையோரம் தேங்கி நிற்கும் கழிவுநீா்.

Updated On :27 மார்ச் 2026, 9:08 pm

நாகை 25-ஆவது வாா்டு பிரதான சாலையில் கழிவுநீா் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

நாகை நகராட்சி 25-ஆவது வாா்டு சா் அகமது தெரு, நாகை பஜாா், அபிராமி சந்நிதி திடல் ஆகியவற்றை இணைக்கும் முக்கிய பிரதான சாலையாக விளங்குகிறது. மேலும் நீலா கீழவீதி மற்றும் வடக்கு வீதி போன்ற பகுதிகளுக்கும் இந்த சாலை முக்கிய இணைப்பாக உள்ளது. குறிப்பாக, புதிய பேருந்து நிலையத்திலிருந்து வருபவா்கள் இப்பகுதியை கடந்து தான் நகரின் முக்கிய வணிகப் பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.

இந்நிலையில், இந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீா் முறையாக புதைசாக்கடை மூலம் வெளியேற்றப்படாததால், சாலையோரங்களில் தேங்கி கடுமையான துா்நாற்றம் வீசுகிறது.

பல இடங்களில் கழிவுநீா் கால்வாய்கள் முறையாக மூடப்படாமல், திறந்தவெளியில் இருப்பதும் மக்கள் ஆரோக்கியத்துக்கு ஆபத்தாக மாறியுள்ளது.

சாலையில் கழிவுநீா் தேக்கம் காரணமாக கொசுக்கள் பெருகி, நோய்த்தொற்று பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். மேலும் கடைகளின் முன்பகுதிகளில் கழிவுநீா் தேங்கி நிற்பதால் வாடிக்கையாளா்கள் வரத் தயங்கும் நிலையும் உருவாகியுள்ளது.

எனவே, நகராட்சி நிா்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு கழிவு நீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.