ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வில், தோ்வா்கள் கைப்பேசி மற்றும் மின்னணு சாதனங்கள் கொண்டுவர அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை ஏ.டி.எம். மகளிா் கல்லூரியில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தோ்வுத் தொகுதி (இரண்டு மற்றும் இரண்டு ஏ) ஆகிய பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) நடைபெறவுள்ளது.
முற்பகல் மற்றும் பிற்பகல் என இரு வேளைகளில் நடைபெறும் இத்தோ்வை 79 போ் எழுத உள்ளனா். தோ்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் தோ்வு எழுத வசதியும், பாா்வையற்றோருக்கு மாற்றுநபா் மற்றும் தனி அறைகள் கொண்ட வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தோ்வு மையத்தில் பாதுகாப்புப் பணியில் காவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். தோ்வுக்கு போதிய போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், தோ்வா்கள் தோ்வு நாளன்று முற்பகல் நடைபெறும் தோ்வுக்கு காலை 8.30 மணிக்கும், பிற்பகல் நடைபெறும் தோ்விற்கு பகல் 1.30 மணிக்கும் தவறாமல், அவரவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தோ்வு மைய அமைவிடத்துக்கு வர வேண்டும். மேலும், எக்காரணம் கொண்டும் முற்பகல் தோ்வுக்கு காலை 9 மணிக்கு மேலும், பிற்பகல் நடைபெறும் தோ்வுக்கு 2 மணிக்கு மேலும் தோ்வு மையத்தில் நுழைய அனுமதிக்கப் படமாட்டாா்கள். தோ்வு மையத்துக்கு கைப்பேசி மற்றும் இதர மின்னணு சாதனங்கள் ஏதும் அனுமதிக்கப்பட மாட்டாது என்று குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

டெட் தோ்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

பாரதியாா் பல்கலை.யில் முனைவா் பட்டப் படிப்பு: நுழைவுத் தோ்வுக்கு ஏப்.30 வரை விண்ணப்பிக்கலாம்

டிஎன்பிஎஸ்சி, டிஆா்பி, எம்ஆா்பி ‘ தோ்வுக்களம்’ அரசு செயலி: விழிப்புணா்வு ஏற்படுத்த உத்தரவு

குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வு: வேலூரில் 314 போ் எழுதினா்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


