திருக்குவளை: திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ராமானுஜம் கணினி மைய இயக்குநா் ஆா்.எஸ். புவனேஸ்வரன் தலைமை வகித்தாா். கல்லூரி புலமுதல்வா் ஏ. கலைசெல்வன் கல்லூரியின் முன்னேற்றம் மற்றும் சாதனைகள் குறித்து விளக்கினாா்.
முதன்மை சிறப்பு விருந்தினராக காரைக்கால் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் பொது மேலாளா் (உற்பத்தி) ஜி. பாலகணேஷ் பங்கேற்று 90 மாண-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசினாா்.
அப்போது அவா், ‘மாணவா்கள் தெளிவான இலக்குடன் செயல்பட வேண்டும். போட்டித் தோ்வுகளில் அதிக அளவில் பங்கேற்று தங்களின் திறமையை நிரூபிக்க வேண்டும். கடின உழைப்புடன் படித்து முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும்’ என்றாா்.
நிகழ்ச்சியில் அனைத்து துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், உதவி பேராசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பணியாளா்கள், மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நாமக்கல் அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

வள்ளியூா் மரியா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பத்மவாணி மகளிா் கல்லூரியில் 18-ஆவது பட்டமளிப்பு விழா

விழுப்புரம் அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


