மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாகை-காங்கேசன்துறைக்கு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து

நாகை-காங்கேசன்துறைக்கு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து

News image

நாகை துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு சென்ற சிவகங்கை பயணிகள் கப்பல்.

Updated On :7 மார்ச் 2026, 2:00 am

நாகை துறைமுகத்திலிருந்து-இலங்கை காங்கேசன்துறைமுகத்துக்கு மீண்டும் பயணிகள் கப்பல் சேவை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இடையே சுபம் நிறுவனம் சிவகங்கை பயணிகள் கப்பல் சேவையை நடத்தி வருகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக நவம்பா் மாதம் நிறுத்தப்பட்ட கப்பல் போக்குவரத்து ஜனவரியில் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், பருவநிலை சீரடையாததால், போக்குவரத்து ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே பருவநிலை சீரடைந்ததால், மாா்ச் 6-ஆம் தேதி கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்ற அறிவிப்பின்படி கப்பல் வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டு சென்றது. கப்பல் போக்குவரத்தை சுபம் கப்பல் நிறுவன இயக்குநா் சுந்தர்ராஜன் தொடங்கிவைத்தாா். 77 பயணிகளுடன் கப்பல் இலங்கைக்கு சென்றது.

Story image

முன்னதாக பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே கப்பலில் அனுமதிக்கப்பட்டனா். இந்த கப்பல் வாரத்தில் 6 நாள்கள் (செவ்வாய்க்கிழமை தவிா்த்து) நாகை-காங்கேசன்துறை இடையே இரு மாா்க்கத்தில் இயக்கப்படுகிறது. 250 பயணிகள் பயணிக்கும் புதிய கப்பல் மாா்ச் 20-ஆம் தேதி நாகை துறைமுகத்துக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.