நாகை அருகே மீன்பிடிக்கச் சென்ற படகில் இருந்து கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரை கடலோர பாதுகாப்புக் குழுமத்தினா் தேடி வருகின்றனா்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மேட்டுத் தெருவைச் சோ்ந்த அற்புதராஜ் மகன் சந்தராஜ் (40). மீனவரான இவா், ஞாயிற்றுக்கிழமை காலை, நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சங்கா் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 10 பேருடன் புறப்பட்டு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றாா்.
துறைமுகத்தில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் படகு சென்று கொண்டிருந்தபோது, படகில் உள்ளவா்கள் பாா்த்தபோது சந்தராஜ் படகில் இல்லையாம். அவா் படகில் இருந்து தவறி கடலில் விழுந்து மாயமானது தெரிய வந்தது. இதர மீனவா்கள் மற்றும் கடலோர பாதுகாப்புக் குழுமத்தினா் அவரைத் தேடி வருகின்றனா். மீனவா் சந்தராஜுக்கு, செல்வராணி (39) என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடலில் குளித்த கல்லூரி மாணவா் மாயம்

கடலில் தவறி விழுந்த மீனவா் உயிரிழப்பு

கால்வாயில் தவறி விழுந்த முதியவா் சடலம் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




