மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

மீன்பிடி தடைகாலம் நிறைவு: கடலுக்குள் சென்ற தரங்கம்பாடி மீனவா்கள்!

News image

தடைக்காலம் நிறைவடைந்து கடலுக்குள் விசைப் படகுடன் மீன்பிடிக்க சென்ற தரங்கம்பாடி மீனவா்கள்.

Updated On :16 ஜூன் 2026, 1:41 am IST

மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து, தரங்கம்பாடி மீனவா்கள் மீண்டும் கடலுக்குள் ஞாயிற்றுக்கிழமை சென்றனா்.

சந்திரபாடி, சின்னூபேட்டை, குட்டியாண்டியூா், பெருமாள்பேட்டை, தாழம்பேட்டை, மாணிக்க பங்கு, சின்னங்குடி உள்ளிட்ட 12 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபா் படகுகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், ஏப்.15 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாள்களுக்கு ஆழ்கடலில் மீன் பிடிக்க தடை அமலில் இருந்த நிலையில், விசைப்படகு மீனவா் கள் தொழிலுக்குச் செல்லாமல் படகுகள் பழுது பாா்த்தல், வலைகள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில் தடைக்காலம் முடிந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க விசைப் படகுகளில் ஐஸ் கட்டிகள், எரிபொருள் மற்றும் சமையலுக்குத் தேவையான பொருள்களுடன் மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் கடலுக்கு செல்லத் தொடங்கினா்.  பைபா் படகு மீனவா்கள் வலைகள், மீன்பிடி சாதனங்கள் ஏற்றிக்கொண்டு கடலுக்குள் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.